Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஒலியின் நிறத்தை உணரும் ஆற்றல் கொண்ட பெண்: மின்­ன­லினால் தாக்­கப்­பட்­ட பின் தற்­கா­லி­க­மாக இழக்­கப்­பட்ட அபூர்வ ஆற்றல் பின்னர் மீளத் திரும்­பி­யதாம்
2017-01-08 09:35:19

ஒலியின் நிறம், வாச­னையை உண­ரக்­கூ­டிய அபூர்வ ஆற்­றலைப் பெற்­றி­ருந்த பெண் ஒருவர், மின்­ன­லினால் தாக்­கப்­பட்ட பின்னர் அந்த ஆற்­றல்­களை இழந்தார் எனவும் ஆனால், சிறிது காலத்தின் பின் மீண்டும் அவ­ருக்கு அந்த ஆற்றல்கள் திரும்­பி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

அயர்­லாந்தின் தலை­நகர் டப்­பி­ளி­னி­லுள்ள ட்ரினிட்டி (திரித்­துவ) கல்­லூ­ரியைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்­களின் மூலம் இப் பெண் குறித்த தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

 

மேற்­படி பெண் யார் என்­பது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஏ.பி. (AB) என மாத்­திரம் இவர் குறிப்­பி­டப்­ப­டு­கிறார். 

 

மனி­தர்­களில் சில­ருக்கு அபூர்வமாக புலன்கள் தொடர்­பு­பட்ட நிலையில் இருக்­குமாம்.

 

உதா­ர­ண­மாக, சில­ருக்கு இலக்­கங்­களை நினைக்­கும்­போது அவர்­களின் மனதில் ஒவ்­வொரு இலக்­கத்­துக்கும் ஒரு குறிப்­பிட்ட நிறம் தோன்­றுமாம்.

 

2000 பேரில் ஒரு­வ­ருக்கு இத்­த­கைய நிலை உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. புலன் உணர்­வுகள் ஒன்­று­ட­னொன்று தொடர்­பு­பட்ட இத்­த­கைய நிலை­மை­யா­னது Synaesthesia (சினேஸ்­தி­சியா) என குறிப்­பி­டப்­படு­கி­றது.

 

ஏ.பி. எனும் பெண்­ணுக்கு 20 வயது ­வரை வர்­ணங்­களை செவி­யினால் கேட்கும் ஆற்றல் இருந்­ததாம். 

 

பாடல்­களை கேட்­கும்­போது நமக்கு ஒலி மட்­டும் தான் கேட்கும். ஆனால், ஏ.பி.க்கு நிறங்­களும் தென்­ப­டுமாம்.

 

ஆனால், 2014 ஆம் ஆண்டில் ஏபி 20 வய­தா­ன­வ­ராக இருந்­த­போது அவரின் தலையில் மின்னல் தாக்­கி­யது. அதன்பின் சிறிது காலம் மேற்­படி அபூர்வ ஆற்­றல்­களை ஏ.பி. இழந்­தி­ருந்தார்.

 

எனினும், பின்னர் மீண்டும் அவ­ருக்கு மேற்­படி ஆற்­றல்கள் திரும்­பி­யுள்­ளன. இதனால் அவர் மீண்டும் சிகிச்சை பெற்று வரு­கி­றாராம்.

 

இதே­வேளை, ஆண் ஒரு­வரும் தான் ஏனை­யோ­ருடன் பேசும்போதும் பாடல்­களை கேட்கும்போதும் நிறங்­களைக் காண்­ப­தாக கூறு­கிறார் எனவும் ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். இந்­ நபர் சி.டி. என குறிப்­பி­டப்­ப­டு­கிறார்.

 

இவர் மன அழுத்­தத்­துக்­கான மருந்­து­களை பயன்­ப­டுத்­தி­ய­போது இந்த ஆற்­றல்­களை இழந்­தி­ருந்­த­தா­கவும் ஆனால், பின்னர் மீண்டும் இவ்வாற்றல்கள் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இவர்கள் குறித்த ஆய்வுகள், எதிர்காலத்தில் இத்தகைய நிலை உள்ள வர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.  

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.