Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எரிந்துகொண்டிருந்த காரிலிருந்து இரு பெண்களைக் காப்பாற்றிய 85 வயது முதியவர்
2017-01-12 12:41:27

விபத்­துக்­குள்­ளாகி எரிந்­து­கொண்­டி­ருந்த கார் ஒன்­றுக்குள் சிக்­கி­யி­ருந்த இரு பெண்­களை 85 வய­தான முதி­யவர் ஒருவர் காப்­பாற்­றிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

 

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த லிண்டெல் மார்பெட் எனும் இம்­ மு­தி­ய­வரை ஒரு ஹீரோ என பலர் புகழ்ந்­துள்­ளனர். 22 வய­தான யுவதி ஒருவர் செலுத்திச் சென்ற கார், அதி வேக­மாக சென்­றதால் கட்­டுப்­பாட்டை இழந்து, லிண்டெல் மார்­பெட்டின் வீட்டு முற்­றத்­துக்குள் வீழ்ந்து தீப்­பற்­றி­யது.

 

அப்­போது தனது கைத் ­த­டி­யுடன் அங்கு வந்த லிண்டெல் மார்பெட், அக்­ கா­ருக் குள் இருவர் சிக்­கி­யி­ருப்­பதை கண்டார். அதை­ய­டுத்து உட­ன­டி­யாக செயலில் இறங்­கிய அவர், தனது கைத்­த­டி­யினால் காரின் கண்­ணா­டியை உடைத்து காரின் சார­தி­யான யுவ­தியை  மீட்டார்.

 

 

அவ்­ வே­ளையில் லிண்­டெலின் பரா­ம­ரிப்­பாளர் அவ­சர தொலை­பேசி இலக்­கத்தின்மூலம் அவ­சர சேவைப் பிரி­வி­னரை அழைத்­தனர். பின்னர் லிண்­டெலும் மேற்­படி பரா­ம­ரிப்­பா­ளரும் இணைந்து மற்­றொரு பெண்­ணையும் காரி­லி­ருந்து மீட்­டனர்.

 

லிண்டெல் மார்­பெட்டின் செயற்­பாட்டை அதி­கா­ரிகள் பாராட்­டி­யுள்­ளனர். லிண் டல் தலை­யி­டாமல் இருந்­தி­ருந்தால், சிறந்த முடிவு ஏற்பட்டிருக்காது என தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.