Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'கருவில் தரிக்கும் குழந்தை கூட கரைந்து செல்லும் துர்ப்பாக்கியம்' - அமைச்சர் ரவூப் ஹக்கீமை வழிமறித்து மக்கள் முறைப்பாடு
2017-01-09 08:44:10

(அஸ்லம் எஸ்.மௌலானா)

 

நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அப்பகுதி மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர். 

 

அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மக்கள் கோரினர்.

 

 

நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அட்டப்பள்ளம் உள்ளூர் பிரதான வீதியினால் பயணித்துக் கொண்டிருந்தபோது தமது குழந்தைகளுடன்  பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வீதியின் நடுவே குழுமியிருந்து  சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதனால் அமைச்சர் சென்று கொண்டிருந்த வாகன அணித்தொடர் பயணத்தை தொடர முடியாத நிலையில்  அவர் வாகனத்திலிருந்து இறங்கி பொதுமக்களுடன் உரையாடினார்.

 

இதன்போது அமைச்சரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன் குறித்த அனல் மின் நிலையத்தினால் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக விபரித்துக் கூறப்பட்டது.

 

இந்த அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறுகின்ற புகை மற்றும் நச்சு வாயுக்களினால் சுவாச நோய், தோல் நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு தாம் முகம் கொடுப்பதாகவும் கருவில் தரிக்கின்ற குழந்தை கூட கரைந்து செல்கின்ற துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருப்பதாகவும் சில பெண்கள் அழுதுஇ புலம்பி அமைச்சரிடம் முறையிட்டனர்.

 

இவற்றை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்  இது குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.