Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மோசடியாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டு: ஷிரந்தி ராஜபக்க்ஷவின் தாயாருக்கு பிணை
2017-01-10 07:44:22

(எம்.எப்.எம்.பஸீர்)

 

மோச­டி­யான முறையில் 36 மில்­லியன் ரூபாவை பயன்­ப­டுத்தி ரத்­ம­லானை பகு­தியில் காணி­யுடன் கூடிய வீடொன்றை கொள்­வ­னவு செய்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷவின் மக­னான யோஷித்த  ராஜ­பக்க்ஷவின் பாட்டி எனக் கூறப்­படும் டேசி பொரஸ்ட் எனும் மூதாட்­டியை பிணையில் செல்ல நீதி­மன்றம் நேற்று அனு­மதி வழங்­கி­யது.

 

 

இதன்­படி  25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 15 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு  சரீரப் பிணை­களில் செல்ல அவ­ருக்கு  கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ரா­கல அனு­ம­தி­ய­ளித்தார்.

 

இரத்­ம­லான வீட்டு விவ­காரம் தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் தொடர்பில் கொழும்பு மேல­திக நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்டு வரும் நிலையில் அது தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

 

இதன் போது நீதி­மன்­றுக்கு கருத்­துக்­களை முன்­வைத்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சந்­தேக நப­ரான டேசி பொரஸ்ட்­டிடம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி வாக்­கு­மூலம் பெற்றோம்.

 

அதற்குப் பின்னர் ஆறு முறை விசா­ர­ணைக்கு அழைத்த போதும்  அவர் வரு­கை­த்த­ர­வில்லை.  இதன்­படி  விசா­ர­ணை­க­ளுக்­காக அவர் உரிய ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை .

 

அத்­துடன் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன. விசா­ரணை அறிக்­கை­யா­னது சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.  டேசி பொரஸ்­டிடம் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளவும் வாக்குமூலம் பெறவும்  அனு­ம­திக்க வேண்டும்' என்­றனர்.

 

எனினும்  இதன் போது குறுக்­கிட்ட நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ள­தாயின் சட்ட மா அதி­ப­ரிடம் ஆலோ­ச­னையும் கோரப்­பட்­டுள்ள நிலையில் தொடர்ந்தும் டேசி­யிடம் வாக்­கு­மூலம் பெற அனு­மதி கோரு­வ­தற்­கான காரணம் என்ன என  இதன்­போது கேள்வி எழுப்­பினார். 

 

இதனால் பொலி­ஸாரின் கோரிக்­கையை நிரா­க­ரித்த அவர்  டேசி என்­பவர் இந்த வழக்கில் சாட்­சி­யா­ளரா அல்­லது குற்­றத்­துக்கு துணை போன­வரா என்­பது தொடர்பில் பொலிஸார் பிழை­யின்றி தெரி­யப்­ப­டுத்த வேண்டும் என நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்டார். இத­னை­ய­டுத்தே பிணையில் செல்ல அவர் அனு­ம­தித்தார்.

 

இதன் போது தனது பாட்­டிக்கு பினை வழங்க  யோஷித்த ராஜ­
பக்க்ஷ முன்­வந்தார்.

 

இதன் போது இவ்­வ­ழக்கில் உண்­மை­யான மோச­டிக்­கா­ரர்கள் திட்­ட­மிட்டு பாது­காக்கப்­ப­டு­கின்­ற­னரா என நியா­ய­மான சந்­தேகம் எழு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய அவர்  தனது பாட்டிக்காக சரீரப் பிணை வழங்க வந்த யோஷித்த ராஜ­பக்க்ஷ  பிணையை ஏற்க முடியாது என அறிவித்தார்.

 

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  

 

(படம்: உதேஷ் இந்திக்க)

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.