Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
150 மில்­லியன் டொலர்கள் செலவில் அமெ­ரிக்க அர­சினால் வடக்கு,கிழக்கு, தென்­ப­கு­தி­க­ளுக்கு குடிநீர் வசதி திட்­டங்கள்
2017-01-10 09:28:17

நகர அபி­வி­ருத்தி, நீர்­வ­ழங்கல் இரா­ஜாங்க அமைச்சர் சுதர்­சினி பெர்­னாண்­டோ­புள்ளே மற்றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் தினேஷ் குண­வர்­தன ஆகி­யோ­ருடன் குடி­நீரை வழங்கும் 150 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான திட்­டத்தை அமெ­ரிக்க அர­சாங்கம் கடந்த வாரம் ஆரம்­பித்து வைத்­துள்­ளது.

 

 

2012 முதல் வரட்சி மற்றும் வெள்­ளத்­தினால் அடிக்­கடி பாதிக்­கப்­படும் வடக்கு கிழக்கு மற்றும் தென்­ப­கு­திக்கு குடி­நீரை வழங்கும் வகை­யி­லேயே இந்த திட்டம் அமைந்­துள்­ளது.

 

 

இது தொடர்­பான வைப­வத்தில் உரை­யாற்­றிய இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷப், நாளாந்தம் போராட்­டத்தை எதிர்­கொண்­டுள்ள இலங்­கையின் குடும்­பங்­க­ளுக்கு நம்­ப­க­தன்மை வாய்ந்த சுத்­த­மான குடி­நீரை வழங்­கு­வது குறித்து அமெ­ரிக்கா அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளது”.

 

 

இந்த திட்­டத்தின் கீழ் மழை­நீரை சேக­ரிப்­ ப­தற்­கான தொட்­டி­களை அமைத்தல், குழாய் மூலம் குடி­நீரை பெறு­வ­தற்­கான வச­தி­களை வழங்­குதல், வெள்ளம் மற்றும் வரட்­சி­யினால் ஏற்­படும் பாதிப்­பு­களை சரி­செய்­வ­தற்­காக உள்ளூர் உட்­கட்­ட­மைப்­பு­களை சீர்­தி­ருத்தம் செய்தல் போன்ற திட்­டங்­களும் அடங்­கி­யுள்­ளன.

 

இலங்­கையின் முக்­கிய சுகா­தாரப் பிரச்­சி­னை­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் ஜனா­தி­பதி சிறி­சேன மற்றும் இலங்கை அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் நாட்டில் அதி­க­ரித்து வரும் கடும் சவா­லாக காணப்­படும் சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.