Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்' இணையத்தில் ஊடுருவி தகவல்களைத் திருடிய நபர் கைது!
2017-01-11 08:12:43

(ரெ.கிறிஷ்ணகாந்)

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக செயற்படுத்தபப்ட்டு வந்த 'ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்" (ஜனபதிட கியன்ன) என்ற இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலிருந்து தகவல்களை பெற்று அதனை ஊடகவியலாளரொருவருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

அத்­துடன் சந்­தேக நப­ரி­ட­மி­ருந்த கணினி துணைச்­சா­த­னங்கள், தக­வல்கள் என்­ப­வற்­றையும் இர­க­சிய பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

 

அஹங்­கம, கத­லுவ பிர­தே­சத்தை சேர்ந்த இளை­ஞரே இவ்­வாறு குறித்த இணை­யத்­த­ளத்­தினுள் பிர­வே­சித்­துள்ளார்.

 

இந்த இணை­யத்­த­ள­ம் மக்­களின் நேரடி முறைப்­பா­டு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பொது­மக்­க­ளினால் அனுப்­பப்­படும் பிரே­ர­ணைகள், மனுக்கள், தனிப்­பட்ட குரல்­ப­தி­வுகள் மற்றும் கடி­தங்கள் போன்ற இலட்­சக்­க­ணக்­கான தகவல் கோப்­புகள் குறித்த இணை­யத்­த­ளத்­தி­லி­ருந்து சந்­தேக நப­ரினால் திரு­டப்­பட்­டுள்­ளது.

 

இச்­சந்­தே­க­ந­ப­ரினால் கள­வா­டப்­பட்ட இந்த கோப்­புகள் ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ரு­வ­ருக்கு மின்­னஞ்சல் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

 

இந்த தக­வல்கள் காண­மல்­போ­யுள்­ளமை குறித்து ஜனா­தி­பதி செய­லகம் கடந்த 7ஆம் திகதி இர­க­சிய பொலி­ஸா­ருக்கு அறி­வித்­தி­ருந்த நிலையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த பொலிஸார் இந்த தக­வல்கள் தனிப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மின்­னஞ்சல் முக­வ­ரி­யி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்
தது.

 

அம்­மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு குறித்த தக­வல்­களை அனுப்­பி­யி­ருந்த மின்­னஞ்சல் முக­வ­ரியை இனங்­கண்­டுள்­ளனர்.

 

இந்த மின்­னஞ்சல் முக­வ­ரிக்­கு­ரிய அஹங்­கம, கத­லுவ பிர­தே­சத்தை சேர்ந்த சந்­தேக நப­ரான இளை­ஞரை கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய போது அவர் குற்றச்சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டுள்ளார். 

 

இந்­நி­லையில் சந்­தே­க­நபர் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் நேற்­று­முன்­தினம் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை அவரை விளக்க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கொழும்பு பிர­தம நீதிவான் லால்­பண்­டார உத்­த­ர­விட்டார். 

 

ஜனா­தி­பதியின் உத­விச்­செ­ய­லாளர் சமீர கன்­னங்­கர பொலி­ஸா­ருக்கு அளித்த  முறைப்­பாட்­டுக்­க­மைய இர­க­சிய பொலிஸ் விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.கே.சேனா­ரத்ன இது தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

 

இது தொடர்பில் சந்­தேக நப­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது, தான் எவ்­வித சிர­ம­மு­மின்றி குறித்த இணை­யத்­த­ளத்­தினுள் ஊடு­ரு­வி­ய­தா­கவும், அந்த இணை­யத்­த­ளத்­தினுள் காணப்­படும் பொது­மக்­களின் மனுக்­க­ளுக்கு தகுந்த நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து தெரி­யப்­ப­டுத்­தவே தான் இவ்­வாறு செய்­த­தாகவும் தெரி­வித்­துள்ளார்.

 

இவ்­வாறு திரு­டப்­பட்ட தக­வல்கள் இலத்­தி­ர­னியல் ஊடக நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் ஒரு­வ­ரது உத்­தி­யோ­க­பூர்வ மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளமை குறித்து விசா­ரணைகள் இடம்­பெ­று­கின்­றன.

 

இதே­வேளை, அண்­மையில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்­தி­னுள் ஊடுருவி, உயர்­த­ரப்­ப­ரீட்­சை­யினை ஒத்­தி­வைக்­கு­மாறு அதி­லுள்ள தர­வு­களை மாற்றி மிரட்டல் விடுத்­தி­ருந்த பாட­சாலை மாண­வ­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்டு பின்னர் ஜனா­தி­ப­தி­யினால் விடு­தலை செய்­யப்­பட்டார்.

 

இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்ட மாண­வ­னுக்கு அதன்பின்னர் ஜனா­தி­பதி ஐபோன் ஒன்­றி­னையும் பெறு­ம­தி­யான பரிசுகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.