Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சுன்னாகம் பொலிஸாரால் நபரொருவர் சித்திரவதை கொலை ; ஏழாவது சந்தேக நபர் இன்றி வழக்கு விசாரணைக்கு அனுமதி!
2017-01-11 08:15:53

(ரி.விரூஷன்)

 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரை சித்திரவதை செய்து படுகொலை செய்தமை தொடர்பாக சட்டமா அதிபரால்  யாழ்.மேல் நீதிமன்றில்  தொடரப்பட்ட வழக்கில் ஏழாவது சந்தேகநபர் இன்றி வழக்கை நடாத்துவதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  

 

குறித்த வழக்கு நேற்று யாழ்.மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்­காக எடுத்­து­கொள்­ளப்­பட்ட போதே மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன்  இந்த உத்­த­ர­வு பிறப்­பித்தார்.

 

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி திருட்டுக் குற்­றச்­சாட்டு சம்­பவம் ஒன்றில் கைது செய்­யப்­பட்ட ஐவரில் ஒருவர் பொலி­ஸாரால் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்டு அவ­ரது சட­ல­ம் கிளி­நொச்சி இர­ணை­மடு குளத்தில் வீசப்­பட்­ட­தாக ஏனைய சந்­தே­க­ ந­பர்­களால் மல்­லாகம் நீதி­வா­னுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. 

 

இத­னை­ய­டுத்து இது தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு    மல்­லாகம் நீதிவான் யூட்சன் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.

 

அத­ன­டிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் ஊடாக  அன்­றைய காலப்­ப­கு­தியில் சுன்­னாகம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் உட்­பட எட்டுப் பேருக்கு எதி­ராக யாழ்.மேல் நீதி­மன்றில் சித்­தி­ர­வதை வழக்கும் கிளி­நொச்சி நீதிவான் நீதி­மன்றில் ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ராக கொலைக் குற்­றச்­சாட்டு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

 

இதன்­படி நேற்­றைய தினம் யாழ்.மேல் நீதி­மன்றில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட சித்­தி­ர­வதை வழக்கு விசா­ர­ணையின் போது  சட்­டமா அதிபர் சார்பில் முன்­னி­லை­யான  பிரதி சொலிசிற்றர் ஜெனரல் (பிரதி மன்­றா­தி­ப­தி­யான) குமார் ரட்ணம் குறித்த வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஏழா­வது பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான விஜ­ய­ரட்ணம் கோபி­கி­ருஷ்ணன் என்­பவர் தற்­போது நாட்டில் இல்­லாத நிலையில் அதனை சாட்­சி­யங்­க­ளூ­டாக உறு­திப்­ப­டுத்தி அவர் இன்­றி வழக்கு விசா­ர­ணையை நடத்த மன்றின் அனு­ம­தியை கோரி விண்­ணப்பம் ஒன்றை செய்தார் அதன்­படி அந்த விண்­ணப்­பம்­ மன்றால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு சாட்­சி­யங்­களை பதிவு செய்ய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து சாட்­சி­யங்கள் பதிவு செய்­ய­பட்­டன.

 

அத்­துடன் இவ்வழக்கின் ஏழா­வது சந்­தே­க­ந­ப­ருக்கு மீண்டும் சர்­வ­தேச பகி­ரங்க பிடி­யாணை பிறப்­பிக்­கப்­ப­டு­வ­துடன் அதனை இலங்கை பொலிஸ்மா அதிபர் ஊடாகவும் குற்றப்புலனாய்வு பணிப்பாளர் ஊடாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் ஊடாகவும் நிறைவேற்றவும் அடுத்த விசாரணைவரை ஏனைய சந்தேக  நபர்களை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.