Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ரவிராஜ் கொலை வழக்கை மீளவும் விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!
2017-01-11 08:25:37

(எம்.எப்.எம்.பஸீர்)

 

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படு கொலை வழக்கின் பிரதிவாதிகளை நிர்பராதிகள் என அறிவித்து விடுதலை செய்த சிறப்பு ஜூரிகள் சபையின் தீர்ப்பை இரத்து செய்து அவ்வழக்கை மீள விசாரணை  செய்ய உத்தரவிட வேண்டும் என   மேன் முறையீடு ஒன்று  தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.

 

நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் சார்பில் இந்த மேன்முறையீட்டை சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று  நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

 

தனது தரப்பு சடத்தரணிகள் சிறப்பு ஜூரிகள் சபைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் இருந்த போதும் ஜூரிகள் சபையின் கீழ் விசாரணைகள் இடம்பெற்ற மையானது பிரச்சினைக்குரியது எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இத்தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபரும் மேன் முறையீடு செய்யத் தயாராகி வரும் நிலையிலேயே பாதிக்கப்பட்ட தரப்பான ரவிராஜின் மனைவி சார்பில் அவ்வழக்கை மீள விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.