Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
காணாமற் போன கல்முனை மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகளில் மாலைதீவு ஹெலிகொப்டர்கள்; விமானங்கள் படகுகள் தீவிரம் - உதவி ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சருடன் பிரதியமைச்சர் ஹரீஸ் பேச்சு
2017-01-11 08:50:01

காணா­மற்­போன மீன­வர்­களை தேடும் நட­வ­டிக்­கையை துரி­தப்­ப­டுத்­து­மாறு மாலை­தீவு உப ஜனா­தி­பதி அப்துல் ஜீஹாத் அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை வழங்­கி­யுள்ளார்.

 

 

அத்­தோடு குறித்த மீன­வர்­களை ஹெலி­கொப்டர் மற்றும் சக்­தி­வாய்ந்த விமா­னங்கள் ஊடாக மாலை­தீவு மற்றும் சர்­வ­தேச கடற்­ப­ரப்­புக்­களில் தேடு­வ­தற்­கான உத்­த­ரவை முப்­படைத் தள­ப­திக்கு பாது­காப்பு அமைச்சர் ஆதம் சரீப் பிறப்­பித்­துள்ளார்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதித் தலை­வரும் விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­க பட்­டுள்­ள­தாக மாலை­தீவு நாட்டின் உப ஜனா­தி­பதி அப்துல் ஜீஹாத் மற்றும் பாது­காப்பு அமைச்சர் ஆதம் சரீப் ஆகி­யோரை பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சந்­தித்து காணாமல் போன மீன­வர்­களை தேடும் நட­வ­டிக்­கை­யினை துரி­தப்­ப­டுத்­து­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார்.

 

இதன்­போதே மேற்­கு­றித்த உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டன என அமைச்­சரின் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

 

மாலை­தீவு அரசு குறித்த மீன­வர்­களை தேடு­வ­தற்கு எடுத்­து­வரும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பிர­தி­ய­மைச்­ச­ருக்கு உப ஜனா­தி­பதி எடுத்­துக்­கூ­றினார்.

 

அத்­தோடு மீன­வர்­களை தேடும் பணியில் மிகுந்த அக்­கறை செலுத்­து­வ­தாக கூறிய உப ஜனா­தி­பதி, குறித்த நட­வ­டிக்­கை­யினை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான பணிப்­பு­ரையை பிரதி அமைச்­சரின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கினார்.

 

இதே­வேளை மாலை­தீவு நாட்டின் பாது­காப்பு அமைச்சர் ஆதம் சரீப்­பையும் பிரதி அமைச்சர் மாலை­தீ­வுக்­கான இலங்கை உயர் ஸ்தானிகர் தொற தெனிய சகிதம் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். 

 

இதன்­போது மாலை­தீவு மீன­வர்­களால் இலங்கை மீனவர்கள் இருவர் மீட்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்த பிரதி அமைச்சர் ஏனைய நான்கு மீனவர்களை தேடும் நடவடிக்கையில் மாற்று வழிமுறைகளை கையாள்வது தொடர்பில் கலந்துரையாடினார். 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.