Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
யாழில் பொலிஸார் இலஞ்சம் பெறுதாக மக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் உறுதியான தகவல்களை வழங்குவதில்லை – வட­மா­கா­ண சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் கணே­ச­நாதன்
2017-01-11 08:55:28

(ரி.விரூஷன்)

 

பொது­மக்­க­ளிடம் பொலிஸார் இலஞ்சம் பெற்­றுக்­கொண்டால் அது தொடர்பில் அச்­ச­மின்றி உடன் அறி­விக்க வேண்டும். அவ்­வாறு பொலிஸார் இலஞ்சம்  பெறு­வது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் அந்த பொலிஸ் அதி­கா­ரிக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அது தொடர்பில் தகவல் வழங்­கி­ய­வர்கள் தொடர்­பான தக­வல்­களும் இர­க­சி­ய­மாக பேணப்­படும் எனவும் வட­மா­கா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் கணே­ச­நாதன் தெரி­வித்­துள்ளார்.

 

யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நேற்று காலை மாவட்ட சிவில் பாது­காப்புக் குழுக் கூட்டம் நடை­பெற்­றது. இக்கூட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்­க­ளினால் பொலிஸார் இலஞ்சம்  பெற்றுக் கொள்­வ­தாக தெரி­விக்­கப்­பட்ட குற்றச்­சாட்­டு­க­ளுக்குப் பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

 

இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,   பொலிஸார் இலஞ்சம் பெற்றுக் கொள்­கின்­றார்கள் என்று பகி­ரங்­க­மான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

 

இருப்­பினும் பொலிஸ் அதி­காரி ஒருவர் இலஞ்சம் பெற்றுக் கொண்டார் என்­பதை உறு­திப்­ப­டுத்தும் வகையில் எவரும் வந்து தக­வல்­களை இது­வ­ரையில் தர­வில்லை. முறைப்­பா­டு­க­ளையும் பதிவு செய்­ய­வில்லை. 

 

 ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் தனது பொலிஸ் நிலை­யத்திலிருந்து வெளியில் பணிக்­காக செல்லும்போது செய்­யப்­படும் பதி­வேட்டில் அவர் எவ்­வ­ளவு பணம் கொண்டு செல்­கின்றார் என்­பதை பதிவு செய்­துதான் செல்ல வேண்டும்.

 

எனவே அவர் வெளி­யி­டங்­களில் மக்­க­ளிடம் இலஞ்சம்  பெற்றால்  சம்­பவ இடத்தில் வைத்து பரி­சோ­தணை செய்­யப்­பட்டு அவர் இலஞ்சம் பெற்றுக் கொள்­வது கண்­டு­பி­டிக்­கப்­படும்.

 

எனவே பொலிஸார் இலஞ்சம்  பெற்றுக் கொள்வது தொடர்பான முறைப்பாடுகள் அல்லது உறுதிப்படுத்தும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக உயர் அதிகாரி களுக்கு ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.  

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.