Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அரச அதி­கா­ரிகள் ஐரோப்­பிய ஆடை அணிய வேண்­டு­மென்­ற ­கட்­டாய சுற்­று­நி­ருபத்தை ரத்து செய்ய ஜனா­தி­பதி தீர்­மானம்
2017-01-11 09:24:25

(எம்.எம்.மின்ஹாஜ்)

 

அரச அதி­கா­ரிகள் கட்­டா­ய­மாக ஐரோப்­பிய ஆடை­களை (கோர்ட் சூட்) அணிய வேண்டும் என்ற சுற்­று­நி­ருபத்தை உட­ன­டி­யாக ரத்து செய்ய தீர்­மா­னித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

 

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனாதி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில், இலங்கை சிறிய தீவாக இருந்­த­போ­திலும் அதி­க­ரித்து வரும் ஜனத்­தொகை வளர்ச்­சிக்கு மத்­தியில் பல்­வேறு சவால்­க­ளுக்கு அர­சாங்கம் முகங்­கொ­டுத்து வரு­கின்­றது.

 

இதன்­கா­ர­ண­மாக வீட­மைப்பு துறைக்கு என்று விஷேட கொள்கை இல்­லாததன் கார­ண­மாக பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன.

 

சுமார் 25 தொடக்கம் 30 வரு­டக்­காலத்தில் விவசாய நிலங்­களின் பரப்பளவு குறை­வடைந்து விவ­சாய துறையில் பெரும் பாதிப்பு ஏற்­படக்கூடும்.

 

ஆகையால் மனித குலத்­திற்கும் உயி­ரி­னங்­க­ளுக்கும் இருப்­பி­டத்­தினை தயார் செய்­வ­தற்கு தற்­போது தயா­ராக வேண்­டி­யது எமது பொறுப்பும் கட­மையுமாகும். 

 

அரச அதி­கா­ரிகள் கட்­டா­ய­மாக ஐரோப்­பிய ஆடை அணிய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி ஒரு­வ­ரினால்  சுற்­று­நி­ரூபம் வெளி­யி­டப்­பட்­டது. எனவே இந்த சுற்றுநிருபத்தை உடனடியாக ரத்து செய்ய தீர்மானத்துள்ளோம் என்றார்.  இவ்வாறானதொரு சுற்றுநிருபம் 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.