Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்கை பத்­தி­ரிகை பேர­வையை இல்­லாமல் செய்ய அழுத்தம்; கலைக்கப் போவதில்லை என்ற தீர்­மா­னத்தில் ஜனா­தி­பதி உறுதி - இலங்கை பத்­தி­ரிகைப் பேரவைத் தலைவர் கொக்­கல வெலல பந்­துல
2017-01-11 10:11:11

(அஷ்ரப். ஏ. சமத்)

 

இலங்கை பத்­தி­ரிகைப் பேர­வையை கலைக்­கு­மாறு பல்­க­லைக்­க­ழ­கங்கள் உட்­பட சில ஊடக விரி­வு­ரை­யா­ளார்கள் அழுத்தம் கொடுத்து அறிக்­கையும் சமர்ப்­பித்­துள்­ளனர்.

 

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­ நி­று­வ­னத்தை ஒரு­போதும் கலைக்கப்போவ­தில்லை என உறு­தி­படக் கூறி­யுள்ளார்.

 

 

ஜனா­தி­ப­தி­யினால்  நிய­மிக்­கப்­பட்ட தலைவர் மற்றும் பணிப்­பாளர் சபை உறுப்­பி­ன­களே இந்த பேர­வையில் உள்­ளனர் என இலங்கை பத்­தி­ரிகைப் பேர­வையின் தலைவர் சட்­டத்­த­ரணி கொக்­கல வெலல பந்­துல தெரி­வித்தார்.

 

இலங்கை பத்­தி­ரிகைப் பேர­வையில் நேற்று நடை­பெற்ற ஊட­க­ட­வி­ய­லாளார் மாநாட்டின்போதே மேற் கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

 

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், பத்­தி­ரிகைப் பேர­வைகள் தெற்­கா­சிய நாடு­க­ளிலும் மற்றும் அவுஸ்­தி­ரே­லியா, லண்டன் போன்ற நாடு­களில் மிகத் திறம்­பட செயற்­பட்டு வரு­கின்­றன. அண்­மையில் சாக் நாடு­களின் இலங்கை பத்­தி­ரிகை பேரவை மாநாடும் இந்­தி­யாவில் நடை­பெற்­றது.   

 

இந் நிறு­வ­னத்தை சிலர் கலைத்­து­வி­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.   இலங்­கையில் வெளி­வரும் பத்­தி­ரி­கை­களில் பொது­மக்­க­ளுக்கு பாத­க­மான மற்றும் பிரச்­சி­னைகள், தனிப்­பட்ட ஒரு­வரை சித்­த­ரித்து மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­திய செய்­திகள் பிழை­யான செய்­தி­களை மீளப் பிர­சு­ரித்தல், பத்­தி­ரிகை ஆசி­ரியர் பத்­தி­ரிகை பேர­வைக்கு சமர்­ப்பித்த முறைப்­பாடு போன்ற பல  பிரச்­சி­னை­களை சுமுகமான சமா­தா­ன­மாக தீா்த்துவைத்தல் போன்ற செயற்­பா­டு­களை இப் பேரவை செயற்­ப­டுத்தி வரு­கின்­றது. 

 

அத்­துடன் வரு­டாந்தம்  ஊட­க­வி­ய­லாளர் டிப்­ளோமா பயிற்சி நெறி­யையும் நடத்தி வரு­கின்­றது. கடந்த வருடம் எமது பயிற்­சியை பூர­ணப்­ப­டுத்­திய ஊட­க­வி­ய­லா­ள­க­ளுக்கு ஜனா­தி­ப­தி­யினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

 

கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற 105 பத்திரிகை முறைப்பாடுகளில்  10 க்கு  சமாதான வழியில் தீா்வு காணப்பட்டது. மேலும் 53 முறைப்பாடு கள் விசார ணைகளில் உள்ளன என்றார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.