Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இன்று வெளியாகும் 'பைரவா'
2017-01-12 09:07:07

அழ­கிய தமிழ் மகன் படத்­திற்கு பிறகு நடிகர் விஜய்யும், இயக்­குநர் பர­தனும் மீண்டும் கூட்­டணி அமைத்து உரு­வா­கி­யுள்ள படம் ‘பைரவா'. விஜய் ஜோடி­யாக கீர்த்தி சுரேஷ் நடித்­தி­ருக்­கிறார்.

 

2017 ஆம் ஆண்டின் முதல் பிர­மாண்ட வெளியீடாக ‘பைரவா’ படம் இந்த பொங்கல் விருந்தாக இன்று வெளியா­கி­ற­து.

 

முதன்­மு­றை­யாக விஜய் படத்­திற்கு சந்தோஷ் நாரா­யணன் இசை­ய­மைத்­தி­ருக்­கிறார். பைர­வாவில் விஜய் இரண்டு வேடங்­களில் நடித்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

 

பைரவா படம் எந்த மாதி­ரி­யான கதை­யம்சம் உடைய படம் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. 

 

அதா­வது படத்தில் ஒரு முக்­கி­ய­மான சமூக பிரச்சி­னையை கையில் எடுத்­தி­ருக்­கி­றாராம் விஜய். இந்­தப்­ப­டத்தின் விஜய் பேசும் வச­னங்கள், அவர் வரும் காட்­சிகள், சண்­டைக்­காட்­சிகள். என ஒவ்­வொன்றும் ரசி­கர்­க­ளிடம் நல்ல வர­வேற்பு பெறும் என்­கி­றார்கள்.

 

அதிலும் விஜய், கோர்ட்டில் பேசும் வன­சங்கள் அனல் தெறிக்கும் என்று ‘பைரவா’ படக்­குழு தெரி­வித்­தி­ருக்­கி­றது.

 

மேலும் இதுநாள் வரை காஸ்­டியூம், ஸ்டைல் உள்­ளிட்ட விட­யங்­களில் தலை­யி­டாத விஜய், பைரவா’ படத்தில் தனது ஹேர்ஸ்டைல், காஸ்­டியூம் டிசைன் உள்­ளிட்ட அனைத்­திலும் விஜய் அதிக மென­கெட்­டுள்­ளாராம். பெற்­றோர்கள், கல்­லூரி மாண­வர்கள் உள்­ளிட்ட அனை­வரும் கட்­டாயம் பார்க்க வேண்­டிய பட­மாக பைரவா இருக்கும் என படக்­கு­ழு­வினர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

 

விஜயா புரொடக் ஷனின் தாராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘பைரவா’வின் முக்கிய கவனங்களில் ஒன்று அப்படத்தின் செட் வேலைபாடுகள்.

 

குறிப்பாக கோயில் செட் ஒன்றில் நடைபெறும் திருவிழா பாடல் ரசிகர்களை வெகு வாகக் கவரும் என எதிர்பார்க் கப்படுகிறது. அதேபோல்  சண்டைக் காட்சிக ளுக்காக கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையம் போன்ற செட்களும் பெரிய அளவில் பேசப் படுமாம்.

 

மைனா, கும்கி, மான் கராத்தே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

அவரின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும், வித்தி யாசமான கெமரா கோணங்களும் படத்திற்கு நிச்சயம் பெரிய பலமாக இருக்கும்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.