Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சங்கங்கள் வினைத்திறனுடன் செயற்படவேண்டுமென அமைச்சர் தயாசிறி எச்சரிக்கை
2017-01-04 11:35:41

விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் செயற்­திட்­டங்­க­ளுக்கு அமைய தேசிய விளை­யாட்­டுத்­துறைச் சங்­கங்கள் துரித செயற்­பா­டு­களில் இறங்க வேண்டும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கேட்­டுக்­கொண்­டுள்ளார். 

 

2017ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத்துறை நாள்காட்டி நூலை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் விளையாட்டுத்துறைத் திணைக்களப் பணிப்பாளர்நாயகம் சமன் பண்டார கையளிப்பதைப் படத்தில் காணலாம்.

 


 

வரு­டத்தின் எதிர்­காலத் திட்­டங்கள் குறித்து விளை­யாட்­டுத்­துறை சங்­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யாடல் மற்றும் 2017ஆம் ஆண்­டுக்­கான விளை­யாட்­டுத்­துறை நாள்­காட்டி வெளி­யீடு அமைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெற்­ற­போது அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

பெரும்­பா­லான சங்­கங்கள் தமது அமைச்சின் செயற்­திட்­டங்­க­ளுக்கு ஈடு­கொ­டுத்து செயற்­படத் தவ­றி­வ­ரு­வது ஏற்­பு­டை­ய­தல்ல. எனவே அனைத்து சங்­கங்­களும் விளை­யாட்­டுத்­து­றையின் நலன்­க­ருதி வினைத்­தி­ற­னுடன் செயற்­பட வேண்டும் என எச்­ச­ரிப்­ப­தாக அமைச்சர் மேலும் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, ‘‘இலங்­கையில் உள்ள 60 விளை­யாட்­டுத்­துறைச் சங்­கங்­களில் பத்து சங்­கங்கள் மாத்­தி­ரமே தங்­க­ளது யாப்பு விதி­களை திருத்­தி­யுள்­ளன.

 

ஆறு சங்­கங்கள் மாத்­தி­ரமே அமைச்­சினால் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள விளை­யாட்­டுத்­துறை காப்­பு­றுதித் திட்­டத்தில் இணைக்­கப்­ப­ட­வேண்­டிய வீர, வீராங்­க­னை­களின் பெயர்­களை சமர்ப்­பித்­துள்­ளன. 

 

14 சங்­கங்கள் மாத்­தி­ரமே தங்­க­ளது வங்கிக் கணக்கு விப­ரங்­களை சமர்ப்­பித்­துள்­ளன. இதன் மூலம் மற்­றைய சங்­கங்கள் கட­மைக்கு இயங்­கு­வ­துபோல் தென்­ப­டு­கின்­றது.

 

எனவே அனைத்து விளை­யாட்­டுத்­துறைச் சங்­கங்­களும் பின்­ன­டை­யாமல் எமது துரித செயற்­திட்­டங்­க­ளுக்கு ஈடு­கொ­டுத்து செயற்­ப­ட­வேண்டும் என்­பதை இங்கு நினை­வு­ப­டுத்­து­கின்றேன்’’ என்றார்.

 

விளை­யாட்­டுத்­துறை சங்­கங்­களின் அலு­வ­ல­கங்கள் அடுத்த ஒரு வாரத்­திற்குள் உருப்­ப­டி­யான அலு­வ­ல­க­மாக இயங்கத் தவ­றினால் அவற்றை வேறு தேவை­க­ளுக்கு ஒப்­ப­டைப்­ப­தா­கவும் அமைச்சர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

 

‘‘எமது அமைச்­சினால் விளை­யாட்­டுத்­துறைச் சங்­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள இடங்­களைப் பார்­வை­யிட (திங்­கட்­கி­ழமை காலை) சென்றேன். ஆனால் அங்கு காலி ஆச­னங்­க­ளையே பார்க்க நேரிட்­டது. இந்த இடங்­களில் விளை­யாட்­டுத்­துறை சங்­கங்­களில் உத்­தி­யோ­க­பூர்வ வேலைகள் அன்­றாடம் நடை­பெ­ற­வேண்டும். அல்­லது அதனால் எவ்­வித பிர­யோ­ச­னமும் இல்லை’’ எனவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

 

டோக்­கியோ 2020 ஒலிம்பிக்
இன்னும் மூன்று வரு­டங்­களில் டோக்­கி­யோவில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­கான இலங்கை வீர, வீராங்­கனை இவ் வரு­டத்­தி­லி­ருந்தே தயார்­ப­டுத்­த­வுள்­ள­தாக அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

 

‘‘2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பதக்­கங்கள் வெல்­வதை குறிககோ­ளாகக் கொண்டு வீர, வீராங்­கனைகளை இவ் வரு­டத்­தி­லி­ருந்தே தயார் செய்­ய­வுள்ளோம். ஒலிம்பிக் நெருங்கும் காலத்தில் சில மாத பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வதால் எவ்­வித அர்த்­தமும் இல்லை.

 

இவ் வரு­டத்­தி­லேயே வீர, வீராங்­க­னை­களைத் தெரிவு செய்து தேவை­யான நிதியை ஒதுக்கி அவர்­க­ளுக்கு தீவிர பயிற்­சி­களை வழங்­குவோம். எனவே திற­மை­வாய்ந்த வீர, வீராங்­க­னை­களின் தர­வு­களை வியைாட்­டுத்­துறை சங்­கங்கள் வழங்க வேண்டும்’’ என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மேலும் தெரி­வித்தார்.

 

இதேவேளை, கடந்த வருடப் பிற்பகுதியில் சர்வதேச வியைாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இலங்கை வீர, வீராங்கனைகளுக்கான பணப்பரிசுகளையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.

 

கெரம், பளுதூக்கல் ஆகிய சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றமைக்காக இந்தப் பணப்பரிசுகள் விளையாட்டுத்துறை அபிவிருத்தி நிதியிலிருந்து வழங்கப் பட்டது,                    (என். வீ. ஏ.)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.