Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தென் ஆபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு 507 ஓட்ட வெற்றி இலக்கு
2017-01-05 10:21:42

தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணிக்கு  இரண்­டா­வது இன்­னிங்ஸில் 507 ஓட்­டங்கள் எனும் இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

 

 

கேப் டவுன் நியூலண்ட்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும் இப்­ போட்­டியில், இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை 3ஆம் நாள் தேநீர் இடை­வே­ளை­யின்­போது ஒரு விக்­கெட்டை இழந்து 17 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

முத­லா­வது இன்­னிங்ஸில் வேர்னன் பிலாண்டர், கெகிசோ ரபடா ஆகி­யோரின் வேகப்­பந்­து­வீச்­சுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் 43 ஓவர்­களை மாத்­திரம் எதிர்­கொண்டு 110 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்ட இலங்கை, வெற்றி இலக்கில் அரை­வா­சி­யைத்­தானும் எட்­டுமா என்­பது சந்­தே­கமே.

 

முத­லா­வது இன்னிங்ஸ் நிறைவில் 282 ஓட்­டங்கள் முன்­னி­லையில் இருந்­த­
போ­திலும் இலங்­கைக்கு பலோ ஒன் கொடுப்­பதை விரும்­பாத தென் ஆபி­ரிக்கா இரண்­டா­வது இன்­னிங்ஸில் 7 விக்­கெட்­களை இழந்து 224 ஓட்­டங்கள் பெற்ற நிலையில் துடுப்­பாட்­டத்தை நிறுத்­திக்­கொண்­டது.

 

போட்­டியின் மூன்றாம் நாளான நேற்றுக் காலை விக்கெட் இழப்­பின்றி 35 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து தனது இரண்­டா­வது இன்­னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆபி­ரிக்கா, துடுப்­பாட்­டத்தில் எதிர்­பார்த்த அளவு பிர­கா­சிக்­க­வில்லை.
எவ்­வா­றா­யினும் போட்­டியின் பிடி தம் கையில் இருக்­கின்­றது என்ற துணிச்­சலில் தென் ஆபி­ரிக்க அணி திளைத்­தது.

 

ஆரம்ப வீரர்­க­ளான ஸ்டீவன் குக், டீன் எல்கர் ஆகிய இரு­வரும் முத­லா­வது விக்­கெட்டில் 64 ஓட்­டங்­களைப் பகிர்ந்த நிலையில் குக்கும் அவரைத் தொடர்ந்து அம்­லாவும் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர்.

 

எனினும் மத்­திய வரிசை மற்றும் பின்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்கள் சுமா­ரான பங்­க­ளிப்பை வழங்கி தென் ஆபி­ரிக்­காவை பலப்­ப­டுத்­தினர்.


எண்­ணிக்கை சுருக்கம்


தென் ஆபி­ரிக்கா 1வது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 392 (டீன் எல்கர் 129, குவின்டன் டி கொக் 101, ஃபவ் டு ப்ளெசிஸ் 38, கேஷவ் மகாராஜ் 32 ஆ.இ., லஹிரு குமார 122 க்கு 6 விக்., ரங்­கன ஹேரத் 57 க்கு 2 விக்.)


இலங்கை 1வது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 110 (உப்புல் சந்­தன 26 ஆ.இ., திமுது கரு­ணா­ரட்ன 24, வேர்னன் பிலாண்டர் 27 க்கு 4 விக்., கெகிசோ ரபடா 37 க்கு 4 விக்.)


தென் ஆபி­ரிக்கா 2வது இன்: 224 க்கு 7 விக். டிக். (டீன் எல்கர் 55, பவ் டு ப்ளெசிஸ் 41, ஸ்டீவன் குக் 30, ஜீன் போல் டுமினி 30, சுரங்க லக்மால் 69 க்கு 4 விக்.)


இலங்கை 2வது இன்: 3ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 17 க்கு 1 விக்.)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.