Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
முன்னாள் வீரர்களுக்கு 1996 உலக சம்பியன்கள் உதவிக் கரம்
2017-01-05 10:46:52

(நெவில் அன்­தனி)

 

இலங்­கைக்கு புக­ழீட்­டிக்­கொ­டுத்து இயலா நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு உதவும் பொருட்டு முழு இலங்­கை­ய­ராலும் விரும்­பப்­படும், போற்­றப்­படும் 1996 உலக சம்­பியன் அணி­யுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நல நிதி ஒன்றை ஆரம்­பித்­துள்­ளது.

 

 

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நல நிதிய ஆரம்ப வைபத்தில் 1996 உலக சம்பியன் அணியினரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்க உறுப்பினர்களும். (படப்பிடிப்பு:  எஸ். எம். சுரேந்திரன்)

 


 

 

இலங்கை உலக சம்­பி­ய­னாகி 20 ஆண்­டுகள் நிறைவை முன்­னிட்டு 1996 உலக சம்­பியன் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அடங்­கிய அணிக்கும் இடையில் நடத்­தப்­பட்ட சில கிரிக்கெட் போட்­டி­களைக் கொண்டு சுமார் 4 மில்­லியன் ரூபா நலநி­தி திரட்­டப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் தலைவர் கிறேம் லெப்ரோய் தெரி­வித்தார்.

 

1996 உலக சம்­பியன் அணி­யி­ன­ருடன் இணைந்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சங்கம், இந்த நல நிதி­யத்தை எஸ். எஸ். சி. பார்­வை­யாளர் கூடத்தில் நேற்­று­முன்­தினம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து வைத்­தது.

 

இந்த நிகழ்­வின்­போது இயலா நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இரு­வ­ருக்கு .நிதி உதவி வழங்­கப்­பட்­டது.

 

நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் என். சி. சி. மைதா­னத்தில் 1996 உலக சம்­பியன் அணிக்கும் முன்னாள் இலங்கை வீரர்கள் அணிக்கும் இடையில் நடத்­தப்­பட்ட போட்டி மூலம் கிடைக்­கப்­பெற்ற நிதியைக் கொண்டு 240 சிறு­வர்­களின் மேம்­பாட்­டிற்­காக ஐந்து வரு­டங்கள் அனு­ச­ரணை வழங்­கி­ய­தாக இந்த நிகழ்வில் பேசிய ரொஷான் மஹ­நாம கூறினார்.

 

அன்று சிறு­வர்­களின் கல்வி மேம்­பாட்­டிற்­காக உத­விய 1996 உலக சம்­பியன் அணி­யினர் இன்று முன்னாள் வீரர்­க­ளுக்கு உத­வ­வேண்டும் என்ற நோக்கில் நல நிதி­யத்தை ஆரம்­பித்­துள்­ளனர்.

 

‘‘இப்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் வீரர்கள் நல நிதித் திட்டம் முன்னாள் வீரர்­க­ளுக்கு உதவும் ஒரு திட்­ட­மாகும். நாங்கள் விளை­யாட ஆரம்­பித்த சகாப்­தத்­திற்கு முன்னர் இலங்கை கிரிக்­கெட்­து­றைக்கு பல­வ­ழி­க­ளிலும் உத­விய முன்னாள் கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு உத­வு­வது எமது கட­மையும் கடப்­பா­டு­மாகும்.

 

இலங்­கையில் கிரிக்கெட் நிறு­வ­னங்கள் சில எமது சங்­கத்தை அங்­கீ­க­ரித்த போதிலும் மற்றும் சில அதனை ஏற்க மறுத்­தன. அவர்கள் ஏற்­கின்­றார்­களோ இல்­லையோ, எமது நோக்­க­மெல்லாம் உதவிக் கரம் நீட்­டு­வோ­ருக்கு கைகொ­டுப்­ப­தாகும். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை’’ என ரொஷான் மஹ­நாம தெரி­வித்தார்.

 

நிதி தேவைப்­படும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இச்சங்கத்தின் உறுப்­பி­னர்கள் அல்­லது 1996 உலக சம்­பியன் அணி வீரர்கள் ஊடாக விண்­ணப்­பிக்­க ­வேண்டும். சங்­கத்தின் காப்­பா­ளர்கள் விண்­ணப்­பங்­களை பரி­சீ­லித்து எவ்­வ­கையில் உத­வலாம், எவ்­வ­ளவு நிதி உதவி வழங்­கலாம் என்­பது குறித்து தீர்­மா­னிப்பர் என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிறேம் லெப்ரோய் தெரி­வித்தார்.

 

1996 உலக சம்­பியன் அணியில் இடம்­பெற்ற அணித் தலைவர் அர்­ஜுன ரண­துங்க, சனத் ஜய­சூ­ரிய, மார்வன் அத்­தப்­பத்து, முத்­தையா முர­ளி­தரன் ஆகி­யோரைத் தவிர மற்­றைய வீரர்கள் அனை­வரும் இவ் வைப­வத்தில் கலந்­து­கொண்­டனர்.

 

அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­றி­யி­ருக்கும் அசன்க குரு­சின்­ஹவும் இந்த நிகழ்வில் கலந்­து­கொண்­ட­துடன் சிட்­னி­யிலும் மெல்­பேர்­னிலும் நடத்­தப்­பட்ட போட்­டி­களின் மூலம் கிடைக்­கப்­பெற்ற சுமார் நான்கு இலட்சம் ரூபா­வுக்­கான காசோ­லையை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் க்றேம் லெப்­ரோ­யிடம் கைய­ளித்தார்.

 

அசன்க குரு­சின்­ஹ­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இப்போட்­டி­க­ளுக்கு மெல்­பர்னில் ரொன் மியர்வோல்ட், கீத் குரூஸ் ஆகி­யோரும் சிட்­னியில் சானக்க சேனா­நா­யக்­கவும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­தனர். 

 

இப்போட்­டி­களில் 1996 உலக சம்பியன் அணி­யி­ன­ருடன் தெரிவு செய்­யப்­பட்ட இரண்டு அணி­யினர் விளை­யா­டினர்.

 

இந்த வைப­வத்தில் பேசிய அர­விந்த டி சில்வா, ‘‘கடவுள் எல்லாக் கொடை­க­ளையும் வழங்­கி­யுள்ளார்.

 

ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரின் நிலை­மை­களைப் பார்த்­த­போது நான் கண்­ணீர்­ விட்­டுள்ளேன். என­வேதான் அவர்­க­ளுக்கு உதவ வேண்டும் என 1996 உலக சம்­பியன் அணி­யினர் தீர்­மா­னித்­தனர்’’ என்றார்.

 

மேலும் 1996 உலகக் கிண்ணப் போட்­டி­களை இர­சி­கர்கள் கண்­டு­க­ளிக்கும் வகையில் விடு­தலைப் புலிகள் இயக்கம் யுத்த நிறுத்­தத்தில் ஈட­பட்­டமை எமக்கு கிடைத்த பெரு வெற்­றி­யாகும் எனவும் அவர் கூறினார்.

 

 

இதே­வேளை, ‘‘தற்­போ­தைய கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் முன்னாள் வீரர்­க­ளாவர் என்­பதை சக­லரும் புரிந்­து­கொ­ள­்வது அவ­சியம்’’ என அசன்க குரு­சின்ஹ தெரி­வித்தார்.

 

ஆரம்­பிக்­கப்­பட்ட முன்னாள் வீரர்கள் நல நிதி­யத்­தி­லி­ருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்­க­ளான ரசல் ஹார்மர், ஏ. ஜே. சம­ர­சே­கர ஆகி­யோ­ருக்கு நிதி உதவி வழங்­கப்­பட்­டது.

 

இந்த நிதி­யத்தின் காப்­பா­ளர்­க­ளாக ரொஷான் மஹ­நாம, அசன்க குரு­சின்ஹ, பிர­மோ­தய விக்­ர­ம­சிங்க, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிறேம் லெப்ரோய், பொரு­ளாளர் பிரி­யன்த உத­ய­ரட்ன ஆகியோர் செயற்­ப­டு­கின்­றனர். 

 

இந் நிகழ்வில் முன்னாள் வீரர்கள் பலர் கலந்­து­கொண்­டனர்

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.