Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
‘‘தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தால் அவரது வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன்’’ - சுனில் காவஸ்கர்
2017-01-06 10:03:47

இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான தலைமைப் பத­வி­யி­லி­ருந்து தோனி ஓய்­வு­பெற்ற போதிலும் கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து ஓய்­வு பெறா­ததை வர­வேற்­ப­தாக இந்­தி­யாவின் கிரிக்கெட் மேதை­களில் ஒரு­வ­ரான சுனில் காவஸ்கர் தெரி­வித்தார்.

 

 

இந்­திய கிரிக்கெட்டுக்கு இன்னும் சில காலம் சேவை­யாற்­றக்­கூ­டிய ஆற்றல் மஹேந்த்ர சிங் தோனிக்கு இருப்­ப­தாக சுனில் காவஸ்கர் கரு­து­கின்றார்.

 

‘‘கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து தோனி ஓய்வு பெற்­றி­ருந்தால் அவரை மீண்டும் கிரிக்­கெட்டில் ஈடு­ப­டு­மாறு அழைப்­ப­தற்கு அவர் வீட்டின் முன்­பாக முத­லா­வது ஆளாக ஆர்ப்­பாட்டம் செய்­தி­ருப்பேன்’’ என சுனில் காவஸ்கர் குறிப்­பிட்டார்.

 

‘‘கிரிக்கெட் வீரர் என்ற வகையில் எதி­ர­ணி­களை துவம்சம் ­செய்யும் ஒரு வீர­ராக இன்னும் காணப்­ப­டு­கின்றார்.

 

தனி ஒரு ஓவரில் போட்­டியின் தன்­மையை மாற்­றக்­கூ­டிய ஆற்றல் மிக்­கவர் தோனி. வீர­ராக அவர் இந்­தி­யா­வுக்கு மிகவும் அவ­சி­ய­மாகத் தேவைப்­ப­டு­கின்றார்.

 

இந்­திய அணியில் அவர் ஒரு வீர­ராகத் தொடர்ந்து விளை­யாட எடுத்த தீர்­மா­னத்தை வர­வேற்­கின்றேன்’’ என்றார் சுனில் காவஸ்கர்.

 

இங்­கி­லாந்­துக்கு எதி­ரான இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் இம் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இரு­வகை போட்­டி­க­ளுக்­கு­மான அணித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து விலகிக் கொள்­வ­தாக மஹேந்த்ர சிங் தோனி நேற்­று­முன்­தினம் அறி­வித்தார்.

 

எனினும் அவர் தொடர்ந்து விக்கட் காப்­பா­ள­ராக அணியில் இடம்­பெ­றுவார் என்­பதை இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை தெரி­வித்­தது.

 

இந்­திய கிரிக்கெட் தெரி­வா­ளர்கள் இன்­றைய தினம் கூடி தோனிக்குப் பதி­லாக புதிய தலை­வரை பெய­ரி­ட­வுள்­ளனர். பெரும்­பாலும் அப் பதவி விராத் கோஹ்­லி­யிடம் ஒப்­ப­டைக்­கப்­படும் என இந்­தியத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

 

மெல்­பர்னில் 2014 டிசம்பர் மாதம் நடை­பெற்ற டெஸ்ட் போட்­டி­யுடன் டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெற்­று­விட்­ட­தாக இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை அறி­வித்­தது. 

 

இந்­திய கிரிக்கெட் வர­லாற்றில் அதி சிறந்த, வெற்­றி­க­ர­மான அணித் தலை­வ­ராக 35 வய­தான தோனி மதிக்­கப்­ப­டு­கின்றார்.

 

தென் ஆபி­ரிக்­காவில் 2007இல் நடை­பெற்ற உலக இரு­பது 20 கிரிக்கெட், இந்­தி­யாவில் 2011இல் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட், இங்­கி­லாந்தில் 2013இல் நடை­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணம் ஆகிய போட்­டி­களில் இந்­தி­யாவை சம்­பி­னாக்­கிய பெருமை தோனியை சாரு­கின்­றது.

 

199 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் இந்­திய அணித் தலை­வ­ராக விளை­யா­டிய தோனி 110 வெற்­றி­களை ஈட்­டி­யுள்­ள­துடன் 74 போட்­டி­களில் தோல்வி கண்டார். 72 சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் தலை­வ­ராக விளை­யா­டிய தோனி 41 வெற்­றி­களை சுவைத்­துள்­ள­துடன் 28இல் தோல்­வியை எதிர்­கொண்டார்.

 

டெஸ்ட் அரங்­கிலும் இந்­தி­யாவின் வெற்­றி­க­ர­மான அணித் தலைவர் தோனி ஆவார். அவ­ரது தலை­மையில் இந்­தியா 27 வெற்றிகள், 18 தோல்விகள், 15 வெற்றிதோல்வியற்ற முடிவுகள் என்ற நிலையை பதிவு செய்துள்ளது.

 

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அடுத்த இந்திய அணித் தலைவரை அல்லது தலைவர்களை தெரிவாளர்கள் இன்று கூடி அறிவிக்கவுள்ளனர்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.