Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஹமீத் அல் ஹுசெய்னின் ஜனா­தி­பதி கிண்ண கால்­பந்­தாட்டம்: முதல் போட்­டியில் ஹமீத் அல் ஹுசெய்­னி-­பு­னித பெனடிக்ட்
2017-01-06 11:08:34

(நெவில் அன்­தனி)
ஹமீத் அல் ஹுசெய்னி கல்­லூ­ரியின் 80களின் பழைய மாண­வர்கள் குழு­வினர் ஏற்­பாடு செய்­துள்ள 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான ஜனா­தி­பதி கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிகள் கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் நாளை சனிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

 

ஆரம்பப் போட்­டியில் நடப்பு சம்­பியன் ஹமீத் அல் ஹுசெய்னி அணியை முன்னாள் சம்­பியன் புனித பெனடிக்ட் எதிர்த்­தா­ட­வுள்­ளது. 

 

ஜனா­தி­பதி கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிக்­கான பிர­தான அனு­ச­ரணை உதவுத் தொகைக்­கான காசோ­லையை ஐடியல்ஸ் லங்கா பிரைவேட் லிமிட்டட் தலைவர் மொஹமத் ரிவ்­கா­னி­ட­மி­ருந்து ஹமீத் அல் ஹுசெய்னி கல்­லூரி அதிபர் எம். எஸ். எம். பைஸால் பெறு­வதைப் படத்தில் காணலாம். எம். எச். எம். இக்பால் (போட்டி ஏற்­பாட்டுக் குழுத் தலைவர்), எம். பி. எம். ஸபீர் (80களின் குழு செயலாளர்), லாஹிர் சாலிஹ் (80களின் குழுத் தலைவர்), பி. எம். எம். முவ்ஷித் (விளையாட்டுத்துறைக் குழுத் தலைவர்) ஆகியோரையும் படத்தில் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்)

 


 

 

இந்த இரண்டு அணி­க­ளிலும் பல சிறந்த வீரர்கள் இடம்­பெ­று­வதால் ஆரம்­பமே ர­சி­கர்­களை சுண்டி இழுப்­ப­தாக அமையும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

 

2008இலி­ருந்து ஹமீத் அல் ஹசெய்னி அழைப்புக் கிண்ண கால் பந்­தாட்டப் போட்­டி­க­ளாக நடத்­தப்­பட்டு வந்த இப் போட்­டிகள் இவ் வரு­டத்­தி­லி­ருந்து ஹமீத் அல் ஹுசெய்­னியின் ஜனா­தி­பதி கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளாக பரி­ண­மித்­துள்­ளது.

 

ஹமீத் அல் ஹுசெய்னி கல்­லூ­ரியின் 80களின் பழைய மாணவர் குழுவின் பெரு முயற்­சியின் பய­னா­கவே இது கைகூ­டி­யுள்­ளது.

 

நட்­பு­றவு, நல்­லெண்ணம், சகோ­த­ரத்­துவம் ஆகி­ய­வற்றைக் கட்டி எழுப்பும் ஓர் கள­மா­கவும் ஹமீத் அல் ஹுசெய்னி கல்­லூ­ரியின் 80களின் பழைய மாண­வர்கள் சங்கம் ஏற்­பாடு செய்­துள்ள ஜனா­தி­பதி கிண்ணப் போட்டி அமை­கின்­றது.

 

ஆரம்பப் போட்­டியைத் தொடர்ந்து முன்­னோடி சுற்று, முன்­னோடி கால் இறுதி, கால் இறுதிப் போட்­டிகள் சிட்டி லீக் மைதா­னத்தில் ஜன­வரி 8, 9, 10, 11, 12ஆம் திக­தி­களில் நடை­பெறும்.

 

அரை இறுதிப் போட்­டிகள் 14ஆம் திக­தியும் இறுதிப் போட்டி 22ஆம் திக­தியும் குதிரைப் பந்­தயத் திடலில் நடை­பெறும்.

 

ஹமீத் அல் ஹுசெய்னி, ஆனந்த, டி. எஸ். சேனா­நா­யக்க, இந்து, இஸி­பத்­தன, முன்னாள் சம்­பியன் லும்­பிணி, றோயல், முன்னாள் சம்­பியன் புனித பெனடிக்ட், வெஸ்லி, தேர்ஸ்டன், ரீ. பி. ஜாயா ஸாஹிரா, நாலந்த (அனைத்தும் கொழும்பு பாட­சா­லைகள்) நீர்­கொ­ழும்பு அல் ஹிலால், மல்­வானை அல் முபாரக், கந்­தானை டி மெஸிநொட், களுத்­துறை திருச்­சி­லுவை, நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா, கம்­பளை ஸாஹிரா, புத்­தளம் ஸாஹிரா, களுத்­துறை முஸ்லிம் மத்­திய கல்­லூரி ஆகிய 20 கல்­லூ­ரிகள் இவ் வருடப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன.

 

இப் போட்­டி­க­ளுக்கு ஐடியல்ஸ் லங்கா பிரைவேட் லிமிட்டட் பிர­தான அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.