Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மீண்டும் டயலொக் சம்­பியன்ஸ் லீக் சுப்பர் 8 சுற்று: புளூ ஸ்டார், விமா­னப்­படை இன்று மோது­கின்­றன
2017-01-06 11:51:39

(நெவில் அன்­தனி)
களுத்­துறை புளூ ஸ்டார் கழ­கத்­திற்கும் விமா­னப்­படைக் கழ­கத்­திற்கும் இடையில் இன்று நடை­பெ­ற­வுள்ள கால்­பந்­தாட்டப் போட்­டி­யுடன் டயலொக் சம்­பியன்ஸ் லீக் சுப்பர் 8 சுற்று மீண்டும் தொட­ர­வுள்­ளது.

 

சுப்பர் 8 சுற்றுப் போட்­டி­களின் அடுத்த மூன்று கட்­டங்கள் களனி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. நான்காம் கட்டப் போட்­டிகள் யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கிலும் கடைசி இரண்டு கட்­டங்கள் புன­ர­மைக்­கப்­பட்­டு­வரும் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கிலும் நடை­பெ­ற­வுள்­ள­தாக இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் கால அட்­ட­வணை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

 

மலே­சி­யாவில் நடை­பெற்ற ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ளனத் தலைவர் கிண்ணப் போட்­டியில் இலங்கை அணி பங்­கு­பற்­றி­ய­தையும் சீரற்ற கால­நி­லை­யையும் காரணம் கூறி இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் போட்­டி­களைப் பிற்­போட்­டி­ருந்­தது.

 

செப்­டெம்பர் மாதம் பிற்­போ­டப்­பட்ட இப் போட்­டிகள் நான்கு மாதங்­களின் பின்னர் மீண்டும் தொட­ர­வுள்­ளன. முழு உல­கி­லேயே இலங்­கையில் மாத்­தி­ரமே ஒரு சுற்றுப் போட்டி நான்கு மாதங்கள் பிற்­போ­டப்­ப­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இவ்­வா­றான பிற்­போ­டல்­களைத் தவிர்ப்­ப­தற்கு இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும் என கால்­பந்­தாட்ட விமர்­ச­கர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

 

இதே­வேளை, சுப்பர் 8 சுற்றின் முதலாம் கட்­டத்தில் றினோன் கழ­கத்தை அதிர்ச்சி தோல்­விய அடையச் செய்த புளூ ஸ்டார் இன்­றைய தினம் விமா­னப்­படைக் கழ­கத்­தைவும் வெற்­றி­கொள்ளும் கங்­க­ணத்­துடன் களம் இறங்­க­வுள்­ளது.

 

இரண்டு அணி­க­ளையும் பொறுத்­த­மட்டில் சம­பலம் கொண்­ட­வை­யாகத் தென்­ப­டு­வதால் இப் போட்டி இறு­தி­வரை விறு­வி­றுப்­பாக அமையும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

கடற்­படைக் கழ­கத்தை கதி­க­லங்கச் செய்த அநு­ரா­த­புரம் சொலிட் கழகம் நாளை நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் நடப்பு லீக் சம்­பியன் கலம்போ எவ். சி.யை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

 

ஞாயி­றன்று நடை­பெ­ற­வுள்ள மற்­றொரு போட்­டியில் றினோன் கழ­கத்தை வென்­னப்­புவை நியூ யங்ஸ் கழகம் சந்­திக்­க­வுள்­ளது. சுப்பர் 8 சுற்றின் ஆரம்பப் போட்­டியில் புளூ ஸ்டார் கழ­கத்­திடம் தோல்வி அடைந்த றினோன் கழகம் இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற கடும் முயற்­சி­யுடன் விளையாடவுள்ளது.

 

திங்களன்று இராணுவக் கழகத்திற்கும் கடற்படை கழகத்திற்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

 

இன்றிலிருந்து திங்கள்வரை நடைபெறவுள்ள நான்கு போட்டிகளும் களனி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.