Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கண்டி கழகத்துக்கு சீ.ஆருடனான போட்டி தீர்மானமிக்கது
2017-01-06 16:04:30

(நெவில் அன்தனி)

 

இவ் வாரம் நடைபெறவுள்ள முதல் தரக் கழகங்களுக்கு இடையிலான டயலொக் றக்பி லீக் போட்டிகளில் லோங்டன் ப்ளேஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள சீ. ஆர். அண்ட். எவ். சி.க்கும் நடப்பு சம்பியன் கண்டி கழகத்திற்கும் இடையிலான போட்டி மிக முக்கிய போட்யாக அமையவுள்ளது.

 

 

இந்த இரண்டு அணிகளும் நித்தவளையில் முதலாம் சுற்றில் மோதிக்கொண்டபோது கண்டி கழகம் 53 க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. எனினும், எதிரணியின் மைதானத்தில் இரண்டாம் சுற்றுப் போட்டி நடைபெறுவதால் கண்டி கழகம் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். 

 

கண்டி கழகம் சம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க வேண்டுமானால் இரண்டாம் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றது.

 

இவ் வருடம் சம்பியனாகக் கூடிய அணி என நம்பப்படும் ஹெவ்லொக்ஸ் கழகம் தனது சொந்த மைதானத்தில் பொலிஸ் கழகத்தை இன்று எதிர்த்தாடவுள்ளது.

 

அணிகள் நிலையில் முதலாம் இடத்திலுள்ள ஹெவ்லொக்ஸ் கழகம் இப் போட்டியில் குறைந்தது 2 போனஸ் புள்ளிகளுடன் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

விமானப்படைக் கழகத்தை வெலிசர மைதானத்தில் சந்திக்கவுள்ள கடற்படைக் கழகம் சிரமத்தை எதிர்கொள்ளாமல் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் தென்படுகின்றது.

 

தியகமவில் சீ. எச். அண்ட். எவ். சி.யை ஞாயிறன்று சந்திக்கவுள்ள இராணுவக் கழகம் இலகுவாக வெற்றிபெறும் என நம்பப்படுகின்றது. 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.