Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஜனாதிபதிக் கிண்ண ஆரம்பப் போட்டியில் ஹமித் அல் ஹுசெய்னி வெற்றி
2017-01-09 09:49:37

(நெவில் அன்­தனி)

ஹமீத் அல் – ஹுசெய்னி கல்­லூ­ரியின் 80களின் பழைய மாண­வர்கள் குழு ஏற்­பாடு செய்­துள்ள ஜனா­தி­பதிக் கிண்ண அழைப்பு பாட­சா­லைகள் கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் ஆரம்பப் போட்­டியில் ஹமீத் அல் ஹுசெய்னி கல்­லூரி வெற்­றி­பெற்­றது.

 

 

கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் நாடா­ளு­மன்ற சீர்­தி­ருத்த மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் கயன்த கரு­ணா­தி­லக்­க­வினால் இப்போட்­டிகள் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக நேற்­று­முன்­தினம் ஆரம்­பித்­து­ வைக்­கப்­பட்­டது.

 

இந் நிகழ்வில் கல்­லூரி அதி­பர், 80 களின் பழைய மாண­வர்­குழு ஏற்­பாட்­டா­ளர்­க­ளுடன்  பங்­கு­பற்றும் அணி­களும் கலந்து கொண்­டி­ருந்­தன.

 

ஆரம்பப் போட்­டியில் கொட்­டாஞ்­சேனை புனித பெனடிக்ட் அணியை சந்­தித்த ஹமீத் அல் ஹுசெய்னி அணி 2 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது.

 

 

போட்­டியின் 5ஆவது நிமி­டத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் மொஹமத் சாஜித் முத­லா­வது கோலைப் போட்டார். எனினும் அடுத்த ஐந்­தா­வது நிமி­டத்தில் புனித பெனடிக்ட் சார்­பாக நிஷொன் தீனு கோல் நிலையை சமப்­ப­டுத்­தினார்.

 

தலா 35 நிமி­டங்­களை இரு பகு­தி­க­ளாகக் கொண்ட இப் போட்­டியின் இடை­வே­ளை­யின் ­போது இரண்டு அணி­களும் தலா ஒரு கோலுடன் சம
­நி­லையில் இருந்­தன.

 

எதிர்­பார்த்த அளவு சுவா­ரஸ்­யத்தை உண்­டு­பண்­ணாத இப் போட்­டியின் 42ஆவது நிமி­டத்தில் புனித பெனடிக்ட் கோல் காப்­பாளர் தன்னை நோக்கி உருண்டு வந்த பந்தைப் பிடிக்கத் தவ­றி­யதைப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் அவ்ஸால் அஹமத் பந்தை கோலினுள் புகுத்தி தனது அணியின் வெற்­றிக்கு வழி­வ­குத்தார்.

 

நொக் அவுட் முறையில் நடை­பெறும் இப் போட்­டி­களில் 20 பாட­சாலை அணிகள் பங்­கு­பற்­று­கின்­றன.

 

நேற்­றைய போட்டி முடி­வுகள்

பம்­ப­லப்­பிட்டி புனித பீட்டர் 2 (ஜொஹான் விக்­ர­ம­சிங்க 9 நிமி­டம், இஷான் தனுஷ 54 நி.) - கம்­பளை ஸாஹிரா 0.

 

நாலந்த 1 (பி. ப்ரவின் 12 நி.) - டி. எஸ். சேனா­நா­யக்க 1 (பி. தாரக்க 22 நி. பெனல்­டியில் நாலந்த 4 க்கு 1 என வெற்றி.

 

புத்தளம் ஸாஹிரா 2 (எம். முஸக்கிர் 20 நி., எம் ஜாஹிர் 31 நி.) - ரீ. பி. ஜாயா ஸாஹிரா 1 (ரீ.எஸ். ஆதில் 49 நி.)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.