Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் கண்டி வெற்றி
2017-01-09 11:01:12

(நெவில் அன்­தனி)


சீ. ஆர். அண்ட் எவ். சி. அணிக்கு எதி­ராக லோங்டன் ப்ளேஸ் மைதா­னத்தில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற டயலொக் றக்பி லீக் போட்­டியில் நடப்பு சம்­பியன் கண்டி விளை­யாட்டுக் கழகம் 32 (5 ட்ரைகள், 2 கொன்­வேர்­ஷன்கள், ஒரு ட்ரொப் கோல்) – 27 (4 ட்ரைகள், 2 கொன்­வேர்­ஷன்கள், ஒரு பெனல்டி) என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி ­பெற்­றது.

 

 

நடப்பு சம்­பியன் கண்டி கழ­கத்­திற்கு இந்தப் போட்டி தீர்­மா­ன­மிக்க போட்­டி­யாக அமைந்­த­துடன் இந்த வெற்றி அணிக்கு சற்று தெம்பை ஊட்­டி­யுள்­ளது.

 

முதலாம் சுற்றில் விமா­னப்­ப­டை­யி­டமும் கடற்­ப­டை­யி­டமும் தோல்வி அடைந்­ததால் கண்டி கழகம் சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைக்­குமா என்ற கேள்வி எழுந்­தது. ஆனால் அதன்பின்னர் தொடர்ச்­சி­யாக வெற்­றி ­பெற்று வரு­கின்­றது.

 

கண்டி கழகம் சார்­பாக தனுஷ்க ரஞ்சன் (3), கனுக்க திசா­நா­யக்க, ஷெஹான் பத்­தி­ரன ஆகியோர் ட்ரைகளை வைத்­தனர். திலின விஜே­சிங்க 2 கொன்­வேர்ஷன் புள்­ள­க­ளையும் ஒரு ட்ரொப் கோல் புள்­ளி
­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்தார்.

 

சீ. ஆர். சார்­பாக கவிந்து டி கொஸ்தா, சுப்புன் வர்­ண­கு­ல­சூ­ரிய, இஷான் நூர் ஆகியோர் ட்ரைகளை வைத்­த­துடன் ப்றின்ஸ் சாமர 2 ட்ரைக­ளுக்­கான மேல­திகப் புள்­ளி­க­ளையும் ஒரு பெனல்டி புள்­ளி­க­ளையும் பெற்­றுக்­கொ­டு­த்தார்.

 

இடை­வே­ளைக்குப் பின்னர் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­பெற்ற ஹெவ்லொக்ஸ்

 

ஹெவ்லொக் பார்க் மைதா­னத்தில் மின்­னொ­ளியில் நடை­பெற்ற டயலொக் றக்பி லீக் போட்­டியில் பொலிஸ் கழ­கத்­திடம் இடை­
வே­ளை ­வரை பின்­னி­லையிலிருந்த ஹெவ்லொக்ஸ் இறு­தியில் 29 (4 ட்ரைகள், 3 கொன்­வேர்­ஷன்கள், ஒரு பெனல்டி) – 13 (ஒரு ட்ரை, ஒரு கொன்­வேர்ஷன், 2 பெனல்­டிகள்) என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­ பெற்­றது.

 

போட்­டியின் முத­லா­வது பகு­தியில் பொலிஸ் கழ­கத்­திடம் கடும் சவாலை எதிர்­கொண்ட ஹெவ்லொக்ஸ் கழகம் இடை­வே­ளை­யின்­போது ஒரு புள்ளி பின்­னி­லையில் இருந்­தது.

 

இந்த வெற்­றி­யுடன் ஹெவ்லொக்ஸ் கழகம் தொடர்ந்தும் அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் இருக்­கின்­றது.

 

ஹெவ்லொக்ஸ் சார்­பாக ப்ரசாத் மது­ஷன்க, துஷ்­மன்த ப்ரிய­தர்­ஷன, லசிந்து இஷான், ஹிரன்த பெரேரா ஆகியோர் ட்ரை புள்­ளி­க­ளையும் துலாஜ் பெரேரா 2 கொன்­வேர்­ஷன்­க­ளுடன் ஒரு பெனல்டி புள்­ளி
­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.

 

பொலிஸ் கழ­கத்­திற்­கான புள்­ளிகள் அனைத்­தையும் ரஜித்த சன்­சோனி (ஒரு ட்ரை, ஒரு கொன்­வேர்ஷன், 2 பெனல்­டிகள்) பெற்­றுக்­கொ­டுத் தார்.

 

விமா­னப்­ப­டையை கவிழ்த்­தது கடற்­படை 


வெலி­ச­றையில் நடை­பெற்ற டயலொக் றக்பி லீக் போட்­டியில் விமா­னப்­படை அணியை 29 – 21 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் கடற்­படை அணி வெற்­றி ­கொண்டு அணிகள் நிலையில் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தை வகிக்­கின்­றது.

 

கடற்­படை சார்­பாக சானக சந்­திமால் (2), கோசல திசேரா, துலாஞ்­சன விஜே­சிங்க ஆகியோர் ட்ரை புள்­ளி­க­ளையும் திலனி விஜே­சிங்க 3 கொன்­வேர்­ஷன்­க­ளுடன் ஒரு பெனல்டி புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்தார்.

 

விமானப்படை சார்பாக கயன்த இதமல்கொட, இசுறு ஜயரத்ன ஆகியோர் தலா ஒரு ட்ரைகளை வைத்தனர். ருமேஷ் ராமதாஸ் ஒரு ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.