Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தென் ஆபிரிக்காவில் இளையோர் அணி திறமையை வெளிப்படுத்தும் என்கிறார் அணித் தலைவர் அவிஷ்க
2017-01-09 12:11:04

(நெவில் அன்­தனி)

 

தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள இளையோர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்த முடியும் என 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணித் தலைவர் அவிஷ்க பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

 

‘தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள இளையோர் மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான இரு தரப்பு இளையோர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் இல­கு­வாக அமை­யப்­போ­வ­தில்லை.

 

எனினும் எங்­களால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது’’ என தென் ஆபி­ரிக்கா புறப்­ப­டு­வ­தற்கு முன்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் அவர் தெரி­வித்தார்.

 

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணியில் 5 சிரேஷ்ட வீரர்­களும் அண்­மையில் 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய 11 வீரர்­களும் அடங்­கு­கின்­றனர்.

 

‘‘இந்த அணி சம­பலம் வாய்ந்­தது. அணியில் திற­மை­வாய்ந்த துடுப்­பாட்ட வீரர்கள், பந்­து­வீச்­சா­ளர்கள், சக­ல­துறை வீரர்கள் இடம்­பெ­று­கின்­றனர்.

 

அத்­துடன் சில வீரர்கள் கழக மட்­டத்தில் விளை­யாடி வரு­வதால் அவர்­க­ளுக்கு சிறந்த அனு­பவம் கிட்­டி­யுள்­ளது. மேலும் அணியில் இடம்­பெறும் 16 வீரர்­களும் தத்­த­மது திற­மை­களை நிரூ­பித்­த­வர்­க­ளாவர்.

 

எனவே அவர்­க­ளது திறமை தென் ஆபி­ரிக்­கா­விலும் தொடரும் என நம்­பு­கின்றேன்’’ என்றார் அணித் தலைவர் அவிஷ்க.

 

தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள மும்­முனை இளையோர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்­றா­வது நாடாக ஸிம்­பாப்வே இடம்­பெ­று­கின்­றது.

 

இந்த இரண்டு நாடு­க­ளு­டனும் தலா 3 போட்­டி­களில் இலங்கை விளை­யா­ட­வுள்­ளது.

 

லீக் போட்­டிகள் நாளை­ம­று­தினம் புதன்­கி­ழமை முதல் எதிர்­வரும் 26ஆம் திக­தி­வரை கேப் டவுன், பார்ள், ஸ்டெலென்பொஷ் ஆகிய மைதா­னங்­களில் நடை­பெறும்.

 

இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்­கான லீக் சுற்று முடிவில் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் அணிகள் பார்ள் விளை­யாட்­ட­ரங்கில் ஜன­வரி 25ஆம் திகதி நடை­பெறும் இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­பெறும்.

 

19 வய­துக்­குட்­பட்ட அணியின் உதவித் தலை­வ­ராக கமிந்த மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அணி பயிற்­று­ந­ராக இலங்­கையின் முன்னாள் உதவி அணித் தலைவர் ரோய் டயஸ் பணி­யாற்­று­கின்றார்.

 

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை குழாம்

 

அவிஷ்க பெர்­னாண்டோ (அணித் தலைவர் புனித செபஸ்­தியார்), கமிந்து மெண்டிஸ் (உதவி அணித் தலைவர் றிச்மண்ட்), விஷ்வா சத்­து­ரங்க (ப்றின்ஸ் ஒவ் வேல்ஸ்), ரெவன் கெலி (புனித ஜோசப்), ஆஷேன் பண்­டார (புனித அலோ­ஷியஸ்), ஹசித்த போய­கொட (திரித்­துவம்), பெத்தும் நிசன்க (இஸி­பத்­தன), ஷம்மு ஆஷான் (ஆனந்த), ஜெஹான் டெனியல் (புனித ஜோசப்), மனில்க டி சில்வா (புனித பீட்டர்), மிஷென் சில்வா (புனித செபஸ்தியார்), திசரு ரஷ்மிக்க (திரித்துவம்), நிப்புன் ரன்சிக (பீ. டி. எஸ். குலரட்ன), ப்ரவீன் ஜயவிக்ரம (புனித செபஸ்தியார்), ஹரின் புத்தில (புனித அலோஷியஸ்), க்ரிஷான் சஞ்சுல (டி மெஸிநொட்)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.