Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மாலிங்­கவின் மீள்­வ­ருகை டெங்­கு­வினால் தடை
2017-01-11 09:57:24

இலங்­கையின் வேகப்­பந்­து­வீச்­சா­ளரும் உலக இரு­பது 20 சம்­பியன் அணியின் தலை­வ­ரு­மான லசித் மாலிங்­கவின் மீள் வருகை டெங்குக் காய்ச்சல் கார­ண­மாக தடைப்­பட்­டுள்­ளது.

 

இதன் கார­ண­மாக தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்­க­ளுக்­கான இலங்கைக் குழாம்­களில் அவர் இடம்­பெ­ற­மாட்டார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

டெங்கு காய்ச்­ச­லினால் மாலிங்க பீடிக்­கப்­பட்­ட­தாலும் அவரால் முறை­யான பயிற்­சி­களில் ஈடு­பட முடி­யா­மல்­போ­ன­தாலும் அவ­ரது மீள் வருகை பிற்­போ­டப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது முகா­மைத்­துவம் தெரி­வித்­துள்­ளது.

 

இடது முழங்­காலில் ஏற்­பட்ட எலும்பு முறிவு கார­ண­மாக கடந்த வருடம் நடை­பெற்ற உலக இரு­பது 20 கிரிக்கெட் மற்றும் ஐ பி எல் போட்­டி­களில் விளை­யா­டு­வதை அவர் தவிர்த்­தி­ருந்தார். 

 

தனது முழங்­காலில் ஏற்­பட்ட எலும்பு முறிவு பூரண குண­ம­டைந்­ததைத் தொடர்ந்து கடந்த செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து மிகவும் அவ­தா­னத்­துடன் பயிற்­சி­களில் ஈடு­பட ஆரம்­பித்தார். எவ்­வா­றா­யினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் வீரர்­க­ளுக்­கான ஒப்­பந்­தத்தில் இணைய அவர் விரும்­ப­வில்லை.

 

கிறிஸ்மஸ் பண்­டி­கைக்கு முன்னர் காய்ச்­ச­லினால் பீடிக்­கப்­பட்­டதை அடுத்து அவரால் பயிற்­சி­களில் ஈடு­ப­ட­மு­டி­யாமல் போன­தாக அவ­ரது முகா­மைத்­துவம் மேலும் தெரி­வித்­தது.

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்கு மாலிங்க தயா­ரா­கி­வி­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

2014இலி­ருந்து பல தட­வைகள் உபா­தைக்­குள்­ளான மாலிங்க 2015 நவம்பர் மாதத்­திற்குப் பின்னர் ஒரே ஒரு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யி­லேயே விளை­யா­டி­யுள்ளார்.

 

மாலிங்­க­வுக்குப் பதி­லாக பெரும்­பாலும் லஹிரு குமார இலங்கை குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவார் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் போட்­டியில் விளை­யா­ட­வுள்ள இலங்கை, எதிர்­வரும் 20ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரிலும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.

 

இந்த இரண்டு தொடர்களுக்குமான இலங்கை அணி இன்னும் ஓரிரு தினங்களில் தெரிவு செய்யப்படவுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.