Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
லஹிரு குமா­ரவின் பந்­து­வீச்சு குறித்து பயிற்­றுநர் ராம­நா­யக்க பாராட்டு
2017-01-11 11:09:44

லஹிரு குமா­ரவின் பந்­து­வீச்சு குறித்து பயிற்­றுநர் ராம­நா­யக்க பாராட்டு
இலங்­கையில் அண்­மையில் உரு­வான வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­களில் லஹிரு குமார தனது ஆற்­றல்­களால் பல­ரையும் வியக்­க­வைத்­துள்ளார்.

 

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணியில் வெகு­வாக பிர­கா­சித்த லஹிரு குமார, ஸிம்­பாப்­வேக்­கான டெஸ்ட் தொட­ருக்கு அழைக்­கப்­பட்­ட­போது அவரால் சாதிக்க முடி­யாமல் போனது. ஆனால் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முத­லா­வது முயற்­சி­யி­லேயே 6 விக்­கட்­களை வீழ்த்தி தனது பெயரை இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வர­லாற்றில் பதித்­துக்­கொண்டார். 

 

தென் ஆபி­ரிக்­காவில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 6 விக்­கட்­களைக் கைப்­பற்­றிய முத­லா­வது இலங்­கையர் என்ற பெரு­மை­யையும் ஐந்து விக்கட் குவி­யலை மிக இள­வ­யதில் பதிவு செய்த இரண்­டா­வது இலங்­கையர் என்ற பெரு­மை­யையும் லஹிரு குமார பெற்­றுக்­கொண்டார்.

 

மிகக் குறு­கிய காலத்தில் தனது பெரு முன்­னேற்­றத்தின் மூலம் பயிற்­று­நர்­க­ளையும் தெரி­வா­ளர்­க­ளையும் பெரிதும் கவர்ந்­துள்ளார்.

 

எனினும் அவர் இன்னும் முன்­னே­ற­வேண்டும் எனவும் அவரால் முன்­னேற முடியும் எனவும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.
எவ்­வாறு கட்­டுப்­பாட்­டுடன் பந்­து­வீச வேண்டும் என்­பது குறித்து லஹிரு குமார கவனஞ் செலுத்­த­வேண்டும் என பந்­து­வீச்சு பயிற்­றுநர் சம்­பிக்க ராம­நா­யக்க கூறு­கின்றார்.
‘‘அவர் தற்­போது மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தை விட சற்று அதி­க­மாக வீசு­கின்றார். காலப்­போக்கில் அவரால் மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பந்­து­வீ­சக்­கூ­டி­ய­தாக இருக்கும். அவ­ருக்கு இப்­போது 19 வயது. அத்­துடன் அவர் பந்­து­வீச்சு குறித்து இன்னும் கற்று வரு­கின்றார். மிகச் சிறந்த அணிக்கு எதி­ராக அதுவும் அதன் சொந்த மண்ணில் 6 விக்­கட்­களைக் கைப்­பற்­று­வது என்­பது பிர­மாதம்.

 

அது பாராட்­டத்­தக்­கது. அவர் சில பந்­து­களை மிகத் துல்­லி­யமாக வீசினார். உரிய இலக்கை நோக்கி சிறப்­பாக பந்­து­வீ­சு­வா­ரே­யானால் அவர்  ஒரு திற­மை­வாய்ந்த பந்­து­வீச்­சா­ள­ராவார்’’ என சம்­பிக்க ராம­நா­யக்க கூறினார்.

 

ஹொக்கி விளை­யாட்டு வீர­ராகப் பிர­கா­சித்து விபத்து கார­ண­மாக 15ஆவது வயதில் கிரிக்கெட் வீர­ராக தன்னை மாற்­றிக்­கொண்ட லஹிரு குமார, நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் மலே­சியா சென்ற 15 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணியில் இடம்­பி­டித்தார்.

 

எனினும் 19 வய­துக்­குட்­பட்டஅணியில் இடம்­பிடித்த பின்­னரே சற்று பிர­பல்யம் அடையத் தொடங்­கி­ய­தாக ராம­நா­யக்க குறிப்­பிட்டார்.

 

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக நொதம்­டனில் கடந்த வருடம் நடை­பெற்ற இளையோர் டெஸ்ட் போட்டி ஒனறில் 134 ஓட்­டங்­க­ளுக்கு 11 விக்­கட்ளை வீழ்த்­தி­யதன் மூலம் ஒரு சிறந்த பந்­து­வீச்­சா­ள­ராக தெரி­வா­ளர்கள் முன்­னி­லையில் தோன்­றினார்.

 

இலங்­கையில் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் பலர் உபாதைக்குள்ளாகி வரும் நிலையில் லஹிரு குமார கட்டுப்பாட்டுடன் பந்துவீச்சில் ஈடுபடுவது உகந்தது எனக் குறிப்பிட்ட சம்பிக்க ராமநாயக்க, அதற்கான சீரிய பயிற்சிகளில் அவர் ஈடுபடுவது வரவேற்கத் தக்கது என்றார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.