Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மேலான பீபா கால்பந்தாட்ட விருது விழா 2016: அதிசிறந்த வீரர் ரொனால்டோ, அதிசிறந்த வீராங்கனை கார்ளி
2017-01-11 17:56:04

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னங்கள் சங்­கத்தின் (FIFA பீபா) அங்­கு­ரார்ப்­பண அதி­சி­றந்த பீபா கால்­பந்­தாட்ட விருது விழாவில் வரு­டத்தின் (2016) அதி சிறந்த வீர­ருக்­கான விருதை கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ வென்­றெ­டுத்தார்.

 

ரியல் மெட்றிட், போர்த்­துகல் ஆகிய அணி­க­ளுக்­காக முன்­கள வீர­ராக விளை­யா­டி­வரும் 31வய­தான க்றிஸ்­டி­யானோ ரொனால்டோ கடந்த வருடம் அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யதன் பல­னாக அதி சிறந்த பீபா கால்­பந்­தாட்ட வீரர் விருதை வென்­றெ­டுத்தார்.

 

கடந்த வருடம் 44 போட்­டி­களில் விளை­யா­டிய ரொனால்டோ, 42 கோல்­களைப் போட்­ட­துடன் 14 கோல்­க­ளுக்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்தார்.

 

அதி சிறந்த பீபா விரு­துக்­கான இறுதிப் பட்­டி­யலில் இடம்­பெற்­ற­வர்­களில் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வுக்கு 34.54 வீத வாக்­குகள் கிடைத்­தன.

 

பார்­சி­லோனா மற்றும் ஆர்­ஜன்­டீன வீரர் லயனல் மெசிக்கு 26.42 வீத வாக்­கு­களும் ரியல் மெட்றிட் மற்றும் பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் கிறீஸ்­மா­னுக்கு 7.53 வீத வாக்­கு­களும் கிடைத்­தன.

 

 

இந்த விருது குறித்து கருத்து வெளி­யிட்ட ரொனால்டோ, ‘‘எனது கால்­பந்­தாட்ட வாழ்க்­கையில் கடந்த வருடம் மிகச் சிறந்த ஆண்­டாகும். போர்த்­து­க­லுக்கு வெற்றிக் கிண்ணம் கிடைத்­தது மகத்­தா­னது.

 

இத­னை­யிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். சம்­பியன்ஸ் லீக் மற்றும் கழக உலகக் கிண்ண வெற்­றி­களை என்னால் மறக்க முடி­யாது. வரு­டத்தை நாங்கள் மிக சிறப்­பாக நிறைவு செய்தோம். ஓர­ணி­யா­கவும் தனிப்­பட்ட ரீதி­யிலும் பல கிண்­ணங்­களை வென்­றெ­டுத்­த­தை­யிட்டு நான் பெரு­மிதம் அடை­கின்றேன்’’ என்றார்.

 

மொஹமத் பாயிஸ் சப்றி


 

அதி சிறந்த பீபா கால்­பந்­தாட்ட வீராங்­க­னைக்­கான விருது அமெ­ரிக்­காவின் கார்ளி ஆன் லொய்­டுக்கு வழங்­கப்­பட்­டது. ஆண்கள் அணிக்­கான அதி சிறந்த பயிற்­றுநர் விருது இத்­தாலி நாட்­ட­வ­ரான குளோ டியோ ரெனி­யே­ரிக்கு கிடைத்­தது. இவர் லெஸ்டர் சிட்டி அணியின் பயிற்­று­ந­ராவார்.

 

மகளிர் அணிக்­கான அதி­சி­றந்த பயிற்­றுநர் விருது ஜெர்மன் மகளிர் அணி பயிற்றுர் சில்­வியா நீடுக்கு கிடைத்­தது.

 

சிறந்த பயிற்றுநர்கள்


 

வரு­டத்தின் அதி­சி­றந்த பீபா பதி­னொ­ருவர் அணி:


கோல்­காப்­பாளர்: மெனவல் நோயர்

 

பின்­கள வீரர்கள்: டெனி அல்வ்ஸ், ஜெரார்ட் பிக், சேர்­ஜியோ ரமோஸ், மார்­செலோ

 

மத்­திய கள வீரர்கள்: லூக்கா மொட்றிக், டோனி க்ரூஸ், அண்ட்ரெஸ் இனி­யெஸ்டா

 

முன்­கள வீரர்கள்: லயனல் மெசி, லூயி சுவாரெஸ், கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ.


வரு­டத்தின் அதி சிறந்த கோலுக்­கான புஸ்காஸ் விருது பெனாங்க மற்றும் மலே­சிய வீரர் மொஹமத் பாயிஸ் சப்­றிக்கு வழங்­கப்­பட்­டது. இந்த விருதை வென்­றெ­டுத்த முத­லா­வது மலே­சியர் சப்றி ஆவார்.

 

2010 முதல் 2015 வரை பெலன் டி’ஓர் விருது என அழைக்­கப்­பட்டு வந்த அதி சிறந்த வீரர் மற்றும் வீராங்­க­னைக்­கான விருது இவ் வருடம் முதல் அதி சிறந்த பீபா கால்­பந்­தாட்ட வீரர், வீராங்­கனை விரு­தாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

 

பிரான்­ஸினால் 2009 வரை வழங்கப்பட்டு வந்த பெலன் டி’ஓர் விருது மீண்டும் அந் நாட்டினால் கடந்த வருடத்திலிருந்து வழங்கப்பட்டுவருவதை அடுத்து பீபா தனது விருதின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளது.

 

(என்.வீ.ஏ.)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.