Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ரொக்கெட் பரி­சோ­தனை நடத்தும் இலங்கை இளைஞர்
2016-02-12 16:04:04

விண்­வெ­ளிக்கு ரொக்கெட் அனுப்ப வேண்டும் என்ற ஆர்வம் கோடிக்­க­ணக்­கா­ன­வர்­க­ளிடம் உண்டு.

 

ரொக்கெட் தொழில்­நுட்பம் குறித்து எண்­ணும்­போது, ரஷ்யா, அமெ­ரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்­தியா போன்­ற­வை தான் பலரின் மனதில் தோன்றும்.

 

ஆனால், இலங்­கை­யி­லி­ருந்தே விண்வெ­ளிக்கு ரொக்கெட் அனுப்பும் திட்­டத்­துடன் உள்ளார் இலங்­கையைச் சேர்ந்த ஓர் இளைஞர். 

 

 

 

குரு­ணாகல் மாவத்­தக­மையைச் சேர்ந்த திவங்க நெரன்ஜன் திசா­நா­யக்க (23) எனும் இந்த இளைஞர் வெறும் கனவு மாத்­திரம் காண­வில்லை.

 

ஏற்­கெ­னவே சிறிய அள­வி­லான குறுகிய வீச்­சு ­கொண்ட ரொக்­கெட்­களை ஏவி பரி­சோ­த­னை­களையும் ஏற்­கெ­னவே நடத்­தி­யுள்ளார்.

 

பெரும்­பாலும் வயல் வெளி­களில் இவரின் ரொக்கெட் பரி­சோ­தனை நடை­பெ­று­கி­றது.

 

வயம்ப றோயல் கல்­லூரி பழைய மாண­வ­ரான திவங்க நெரன்ஜன், தற்­போது மொரட்­டு­வை­யி­லுள்ள சிலோன் ஜேர்மன் தொழில்­நுட்ப பயிற்சி நிறு­வ­கத்தில் மின் பொறி­யியல் துறையில் பயின்று வரு­கிறார்.

 

2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து இவர் பல்­வேறு ரொக்கெட் பரி­சோ­த­னை­களை நடத்­தி­யுள்ளார்.  

 

இறு­தி­யாக கடந்த வரும் ஜூலை 5 ஆம் திகதி தனது 4 ஆவது ரொக்­கெட்­டான Air Touch - 03 Rocket   ஐ அவர் பரி­சோ­தித்தார்.

 

அது 8.5 அடி நீளமும் 6 கிலோ­கிராம் எடை­யையும் கொண்ட ரொக்­கெட்­டாகும். 

 

தற்­போது அவர் தயா­ரித்­துள்ள புதிய ரொக்­கெட்­டுக்கு  sky Air Touch - 01 Rocket எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

 

 

 

15 அடி நீளத்­தையும் ஒரு அடி விட்­டத்­தையும் கொண்ட இந்த ரொக்கெட் 100 கிலோ­கிராம் எடையைக் கொண்­டுள்­ளது.

 

18.5 கி.மீ. வரை உய­ரத்­துக்கு கிடையாகச் சென்று 7 கி.மீ. தூரத்தை அடை­யக்­கூ­டிய ரொக்கெட் இது­வெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

 

இலங்கைக் கொடி­யுடன் தங்க நிறத்தில் மின்னும் இந்த ரொக்­கெட்டை விரைவில் ஏவி பரி­சோ­திப்­ப­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக மெட்ரோ நியூஸுக்கு திவங்க நெரன்ஜன் தெரி­வித்தார். 

 

HathoR Aerospace எனும் நிறு­வ­னத்தை திவங்க நெரன்ஜன் ஸ்தாபித்­துள்ளார்.

 

இலங்­கையைத் தள­மாகக் கொண்ட முத­லா­வது ரொக்கெட் பரிசோ­தனை நிறு­வனம் இது­வெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

விண்­வெ­ளிக்கு செய்­ம­தி­யொன்றை ஏவக்­கூ­டிய ரொக்­கெட்­களை தயா­ரித்தல், இலங்­கையில் ரொக்கெட் பரி­சோ­த­னை­களை நடத்­து­தல், விமா­னங்கள், விண்­க­லங்­களை வடி­வ­மைத்தல், புதிய ரொக்கெட் மற்றும் ஜெட் இயந்­திர பொறி­முறை­களை கண்­டு­பி­டித்தல் என்­பன இந் ­நி­று­வ­னத்தின் இலக்­காகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

 

இள­மைக்­கா­லத்­தி­லி­ருந்து ரொக்­கெட்கள் மீது ஆர்வம் கொண்­டி­ருந்த திவங்க நிரன்ஜன் திசா­நா­யக்க, சுய­மா­கவே ரொக்கெட் தொழில்­நுட்­பத்தை கற்­றுக்­கொண்­டதாக கூறு­கிறார்.

 

அமெ­ரிக்க விண்­வெளி முக­வ­ர­க­மான நாசா மற்றும் ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ரத்தின் இணை­யத்­த­ளங்கள் ஊடக ரொக்கெட் தொழில்­நுட்பம் ஆகி­யன இதற்கு உத­வி­யாக இருந்­தன எனவும் அவர் கூறு­கிறார்.

 

தனது குடும்­பத்­தினர் தனது செயற்­பா­டு­க­ளுக்கு பெரும் ஆத­ர­வாக உள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

 

“இலங்­கையும் விண்­வெ­ளிக்கு செய்­மதி அனுப்பும் ஒரு நாடாக்க வேண்டும் என்­பதே எனது இலட்­சியம்.  

 

வெளி­நா­டு­களில் அல்­லாமல் இலங்­கை­யிலேயே இதை செய்ய வேண்டும் என நான் விரும்­பு­கிறேன்” என மெட்ரோ நியூஸிடம் திவங்க நெரன்ஜன் திசா­நா­யக்க கூறினார்.  

 

இது தொடர்­பாக அதி­கா­ரி­களும் மக்­களும் எந்த வகையில் எவ்­வ­கையில் உதவ வேண்டும் என விரும்­பு­கி­றீர்கள் எனக் கேட்­ட­போது, “விண்­வெ­ளிக்கு ரொக்­கெட்­களை அனுப்பும் நோக்­குடன் இதற்­கான ஆய்வு வச­தி­களைக் கொண்ட நிறு­வ­ன­மொன்றை ஸ்தாபித்தால் இத்­ திட்­டத்­துக்கு அது பெரும் உத­வி­யாக இருக்கும்” என அவர் தெரி­வித்தார். 

 

- ஆரெஸ்

 

 

SKY TOUCH – 01  ROCKET

                 
 •  Type – Experimental Rocket
 •  Country   Of  Origin  - Sri Lanka
 •  Designer – HathoR Aerospace
 •  Year – 2016

                          Specifications

 •  Weight – 100kg
 •  Height – 15ft
 •  Diameter – 1ft
 •  Engine – Single Stage Solid Fuel Rocket Booster (Burn Time - 180s)      
 •  Maximum Altitude – 18.5km
 •  Flight Angle (Maximum)  - 70⁰
 •  Range (Launch To Land  Distance)  – 7km
 •  Powered Ascent  - 17km
 •  Powered Ascent 17km + Coasting Flight 3km = 20km
 •  Speed – 800km/h
 •  Weight @ Landing -  80kg
 • Launch Method -  Vertical  Launch
 • Launch Platform – Mobile Launch Pad

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.