Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மனிதர்களுக்கு பணிவிடை செய்யும் அதி நவீன மனித ரோபோ
2014-07-20 15:46:00

மனிதர்களுக்கு பணிவிடை செய்யக்கூடிய அதி நவீன ரோபோக்களை ஜப்பானி ஹொண்டா நிறுவனம தயாரித்துள்ளது.

 


1986ஆம் ஆண்டு முதல் அசிமோ எனும் ரோபோக்களை ஹொண்டா நிறுவனம் உருவாக்கி வருகின்றது. அண்மைக்காலங்களில் இதன் வளர்ச்சியானது மிகப் பெரியளவில் உயர்ந்து நிற்கின்றது.


இந்நிலையில் அதி நவீனகரமாக மனிதர்களை குரல் மற்றும் முகங்களை வைத்து அடையாளம் கண்டு பணிவிடை செய்யும் அசிமோ ரோபோவினை உருவாக்கியுள்ளது ஹொண்டா நிறுவனம்.

 

இந்த ரோபோவினால் முன்னாலும் பின்னாலும் நடக்க முடியும். அத்துடன் படிகளில் ஏறவும் குதிக்கவும் வல்லது. இவற்றுக்கு மேலாக மனிதர்களின் கையைப் போன்று இதன் கைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மூடிகளை திறந்து பானங்களை நிரப்பி எடுத்து அவற்றினை பகிரவும் முடியும்.


செயற்கை கையை பொருத்தப்பட்ட மனிதர்களாலே இந்த வேலைகளை செய்வது மிகக் கடினமானதொரு விடயமாக காணப்படும் நிலையில் இந்த அசிமோ ரோபோவின் கண்டுபிடிப்பு ரோபோ உற்பத்தியில் மற்றுமொரு மைல் கல்லினை எட்டியுள்ளது என்கிறார்கள் ஆய்வார்கள்.


இந்த ரோபோவினை வைத்து பரிசோதனைகள் மேற்கொண்டு வீடுகள் மற்றும் வேலைத்தளங்களில் உபயோகப்படுத்தக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியினை முன்னெடுக்க ஹொண்டா நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

 


எவ்வாறெனினும் ஹொண்டா நிறுவனத்திடம் தற்போதைக்கு இந்த மனித ரோபோக்களை வணிக ரீதியாக மாற்றுவதற்கான திட்டம் எதுவுமில்லை. ரோபோக்களின் கைகளில் எதிர்காலம் என்ற மனித ரோபோக்களின் கனவு விரைவில் நனவாகப் போவதை உணர்த்துகின்றது இந்த அசிமோ.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.