Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பேஸ்புக்கிற்கு போட்டியாக 'எல்லோ'
2014-10-01 18:03:50

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ் புக் இற்கு போட்டியாக 'எல்லோ' (Ello ) )எனும் புதிய இணையத்தளமொன்று வேகமாக பரவி வருகிறது.

பேஸ் புக் போன்று ஏராளமான சமூக வலைத்தளங்கள் இணைய உலகில் உள்ளன. ஆனால் பேஸ் புக் இற்கு போட்டியாக அமையக்கூடும் என கருதப்படும் என சமூக வலைத்தளம் எல்லோ. 

 

விளம்பரங்கள் அற்ற சமூக வலைத்தளமாக எல்லோ இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை இதன் பிரபல்யததுக்கு முக்கிய காரணமாகும். 

 

எல்லோ, பேஸ்புக் தொடர்பாக கூறப்படும்  குறைகளை எல்லாம் களைந்து முற்றிலும் புதிதான பயனாளிகளை மையமாக கொண்ட சமூக வலைப்பின்னலாக எல்லோ அறிமுகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

அமெரிக்காவைச் சேர்ந்த போல் பட்னிட்ஸ் (Paul Budnitz)  என்பவர்தான் எல்லோவின் ஸ்தாபகர்.  வேர்மன்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் சைக்கிள் கடையொன்றின்  உரிமையாளராவார். தனது  நண்பர்கள் 90 பேருக்காக அவர் உருவாக்கிய சமூக வலைத்தளம்தான் எல்லோ. கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி அவர் இதை அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றினார். தற்போது ஒவ்வொரு மணித்தியாலமும் 31,000 பேர் எல்லோவில் இணைவதற்கு விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது.

 

பேஸ்பிக்கிற்கு மாற்று

' உங்கள் சமூக வலைப்பின்னல் சேவை விளம்பர நிறுவனங்களால் சொந்தம் கொண்டாடப்படுகிறது என எல்லோ நெத்தியடியாக பேஸ்புக் மீது தாக்குதல் நடத்தி வீட்டு, விளம்பரங்கள் இல்லாத சேவையாக அறிமுகம் செய்து கொள்கிறது. பயனாளிகளின் டைம்லைனில் விளம்பரங்களை இடம்பெற வைப்பதில்லை என்பதையும் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரித்து மூன்றாவது நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்பதையும் எல்லோ தனது சேவையின் சிறப்பம்சமாக சொல்கிறது. 

 

இவை இரண்டுமே பேஸ்புக் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கின்றன.பேஸ்புக் உங்களை வைத்து காசு பார்க்கிறது என்று சொல்லப்படுவதை பொருட்படுத்தாதவர்கள் கூட பேஸ்புக் டைம்லைன் முழுவதும் விளம்பரமயமாகி வருவதால் நிச்சயம் அதிருப்தி கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டு அவர்களின் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான சேவை என்பதை மீறி பேஸ்புக்கில் எப்போதும் விளம்பர செய்திகளும் தகவல்களும் எட்டிப்பார்த்து கொண்டிருக்கின்றன.

 


இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல்  நட்பு பகிர்வுகளுக்கானதாக மட்டுமே இருக்கும் எளிமையான தூய்மையான சமூக வலைப்பின்னல் சேவை இருந்தால் எப்படி இருக்கும் ? என்ற ஏக்கம் பலருக்கு இருக்கலாம்.

 

அமோக வரவேற்பு

 

இந்த ஏக்கத்திற்கான பதிலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் எல்லோ உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் துவக்கப்பட்ட சில வாரங்களிலேயே பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அழைப்பு மூலம் உறுப்பினர்களை அனுமதிக்கும் இந்த சேவையில் சேர மணிக்கு 30,000 பேருக்கு மேம் விருப்பம் தெரிவிப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த சேவையில் இணைவதற்கான அழைப்புகள் பிரபல ஏல் இணையதளமான இபேவில் விற்கப்படும் அளவுக்க் இதற்கு கிராக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 


இவற்றை விட முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது. சமீபத்தில் பேஸ்புக் , பயனாளிகள் தங்கள் உண்மையான பெயரில் தான் பதிவு செய்து கொள்ள வேண்டும் , பொய்யான பெயர்கள் செல்லுபடியாகாது என தெரிவித்தது. இதனால் குறிப்பிட்ட பாலின கொள்கையை கொண்டவர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். இவர்களில் பலர் பேஸ்புக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேற விரும்பும் நிலையில் , எந்த பெயரில் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் சுதந்திரம் அளிக்கும் எல்லோ கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. இதனால் தான் எல்லோ பற்றி எல்லோரும் பேசத்துவங்கியிருக்கின்றனர்.

 எப்படி சேரலாம்?


எல்லோ சமூக வலைப்பின்னல் மிக எளிதாக இருப்பதாக சொல்கிறார்கள். அதன் வடிவமைப்பில் அலங்காரமோ குழப்பமோ கிடையாது. அதன் அமசங்களிலும் ஆர்ப்பாட்டம் இல்லை என்கின்றனர். இதில் உறுப்பினராக சேர்ந்தால், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். ( இணைப்புகள் மற்றும் வீடியோக்களும் உண்டு) . நண்பர்கள் பகிர்வை பார்க்கலாம். அவ்வளவு தான் என்கிறனர்.  லைக்,ஷேர் எல்லாம் கிடையாது. திடிரென எட்டிப்பார்க்கும் வீடியோ மற்றும் விளம்பரங்களும் கிடையாது. டைம்லைனிலும் அதிக குழப்பம் இல்லை. பதிவுகள் நண்பர்களின் பதிவுகள் , பொதுவானவை  என்று மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளன.

 

எல்லோவில் எனவே உறுப்பினராக சேர அழைப்பு தேவை. ஒன்று உங்கள் நண்பர்கள் உறுப்பினராக இருந்து அழைக்க வேண்டும். இல்லை என்றால் இதில் அழைப்பு கேட்டு கோரிக்கை சமர்பித்து காத்திருக்கலாம்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.