Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மகள் இறந்த பின்னர் அவரின் ஆசையை நிறைவேற்றிய தந்தை
2016-12-29 20:42:19

தந்­தைக்கு மகள்கள் எப்­போதும் தேவ­தை­கள்தான். எந்த பொருள் கேட்­டாலும் தங்­களால் முடிந்த வரை மகள்­களின் விருப்­பத்தை நிறை­வேற்றி விடவே தந்­தை­யர்கள் முயல்­வார்கள். பணக்­காரத் தந்­தை­யாக இருந்­தாலும் சரி ஏழை­யாக இருந்­தா­லும்­சரி மகள்கள் கேட்டால் ஏன் எதற்கு என்ற கேள்வி எழாது. தந்­தை­யு­ட­னான மகள்கள் உறவு அப்­படி.   

 

 

தந்தை- மகள் உற­வுக்கு எடுத்துக் காட்­டாக கேர­ளத்தில் ஒரு நெகிழ்ச்­சி­யான சம்­பவம் நடந்­துள்­ளது. இந்த தந்­தையும் மகளின் ஆசையை நிறை­வேற்­றிதான் வைத்­துள்ளார். ஆனால், மகள் இறந்த பிறகு என்­ப­துதான் சோகத்­திலும் சோகம். 

 

கேரள மாநிலம் மால்­மோட்டம் நகரைச் சேர்ந்­தவர் அனில். இவ­ரது மகள் அனகா. அங்­குள்ள பாட­சாலை ஒன்றில் படித்து வந்­துள்ளார். படிப்பு, விளை­யாட்டு என எதிலும் அனகா கெட்டி. தந்தை அனில், அனகா மீது உயி­ரையே வைத்­தி­ருந்தார். 

 

மகள் என்ன கேட்­டாலும் வாங்கிக் கொடுத்து விடு­வது அனிலின் சுபாவம். 12 ஆம் தரம் படிக்கும் மாண­வி­யான அன­கா­வுக்கோ தங்க நகைகள் மீது ஈடு­பாடு இல்லை. ஆனால், காலில் தங்கக் கொலுசு அணிய வேண்­டு­ மென்­பது நீண்ட நாள் ஆசை. தங்கக் கொலுசு வாங்கித் தரு­மாறு தந்­தை­யிடம் கேட்­டி­ருந்தார்.

 

எளிய குடும்பம் என்­பதால் மகளின் ஆசையை உட­ன­டி­யாக அனிலால் நிறைவேற்றி விட முடிய வில்லை. மகளின் ஆசையை நிறை­வேற்ற முயற்­சித்துக் கொண்டி ருந்தார். 

 

'கிறிஸ்மஸ் தினத்­தன்று தனக்கு கிப்­டாக தங்க கொலுசு வாங்கி தந்து விட­வேண்­டு­மென்று' தந்­தை­யிடம் அனகா கண்­டிப்­புடன் கூறி­யி­ருந்தார். அனிலும், நிச்­சயம் கிறிஸ்­மஸ் பரி­சாக தங்கக் கொலுசு வாங்கித் தந்­து­வி­டுவேன் " என மக­ளிடம் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார். இதற்­கி­டை­யேதான் அந்த சோகச் சம்­பவம் நிகழ்ந்­தது.

 

கடந்த 16ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுக் கொண்­டி­ருந்த போது அனகா மீது டெம்போ வேன் ஒன்று மோதி­யது. 

 

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்­பட்ட அனகா இரத்த வெள்­ளத்தில் சாய்ந்தார். அங்­குள்ள வைத்­தி­ய­ சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு அனகா உயி­ருக்கு போராடிக் கொண்­டி­ருந்தார். 

 

அனா­கா­வுக்கு நினைவு எப்­போது திரும்பும் என்ற பரி­த­விப்­புடன் டாக்­டர்­களை ஏக்­கத்­துடன் பார்த்துக் கொண்­டி­ருந்­தனர். அன­கா­வுக்கு சில சம­யங்­களில் நினைவு திரும்பும். அறைக்கு வெளியே காத்­தி­ருக்கும் தந்தை அனில் மக­ளி­டம் பேச ஆசை­யுடன் ஓடி வருவார்.   

 

ஆனால், அதற்குள் அனகா திரும்­பவும் மயக்க நிலைக்கு சென்று விடுவார். இப்­ப­டி­யாக கடந்த 9 நாட்­க­ளாக வைத்­தி­ய­சா­லையில் போராடிக் கொண்­டி­ருந்த அனகா கிறிஸ்மஸ் தினத்­தன்று இறந்து போனார். 

 

இத­னை­ய­டுத்து அங்­குள்ள அரச பாட­சா­லையில் அன­காவின் உடல் இறுதி மரி­யா­தைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்­தது. மகளின் உயி­ரற்ற உடலை துக்கம் தாளாமல் பார்த்துக் கொண்­டி­ருந்தார் அனில்.

 

திடீ­ரென அனி­லுக்கு மக­ளுக்கு கிறிஸ்மஸ் பரி­சாக தங்கக் கொலுசு பரி­ச­ளிப்­ப­தாக கூறி­யது நினை­வுக்கு வந்­தது. உயி­ருடன் இருக்கும் போதுதான் அவ­ளுக்கு வாங்கிக் கொடுக்க முடி­ய­வில்லை. இறப்­பி­லா­வது மகளின் இறுதி ஆசையை நிறை­வேற்றி வைக்க, அனில் முடிவு செய்தார்.

 

பத­றி­ய­படி யாரி­டமும் சொல்லிக் கொள்­ளாமல் வேக வேக­மாக ஓடியவர் நகைக் கடை ஒன்­றுக்குள் புகுந்தார்.

 

மகளின் இறுதிச் சடங்­குக்கு வைத்­தி­ருந்த பணத்தில் தங்கக் கொலுசு வாங்­கி­யுள்ளார். மகளின் உயி­ரற்ற உடல் அருகே சலனமற்று நின்­ற அனில், அவரது சலனமில்லாத கால்களில் இரு தங்கக் கொலுசுகளையும் கண்ணீர் மல்க மாட்டியுள்­ளார். இதன்போது, இதனைப் பார்த்­த­வர்­களின் கண்­கள்  குளமாகியுள்­ள­ன. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.