Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பறந்­து­ கொண்­டி­ருந்த ஹெலி­யி­ருந்து நபர் ஒரு­வரை வெளியில் தள்ளி கொலை செய்தேன் - பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி கூறி­ய­தாக செய்தி
2017-01-01 11:17:51

பறந்­து­கொண்­டி­ருந்த ஹெலி­கொப்டர் ஒன்­றி­லி­ருந்து நபர் ஒரு­வரை தான் வெளியே தள்ளி கொன்­ற­தாக பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிகோ டுவார்ட்டே கூறினார் என பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

 

பிலிப்­பைன்ஸில் போதைப் பொருள் கடத்­தல்­கா­ரர்கள், விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­பவர் ஜனா­தி­பதி டுவார்ட்டே.

 

போதைப் ­பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் நூற்­றுக்­க­ணக்­கானோர் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் ஏரா­ள­மா­னனோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

 

இது தொடர்­பான அமெ­ரிக்கா முத­லான நாடுகள் மற்றும் மற்றும் ஐ.நாவின் கண்­ட­னங்­க­ளையும் ஜனா­தி­பதி ரொட்­றிகோ டுவார்டே புறக்­க­ணித்து வரு­கிறார். 

 

டாவோ நகர மேய­ராக தான் பதவி வகித்த காலத்தில், போதைப் ­பொருள் விற்­ப­னை­யா­ளர்­களைத் தேடி பொலி­ஸா­ருடன் இணைந்து முற்­று­கையில் ஈடு­பட்­ட­துடன் போதைப் பொருள் விற்­ப­னை­யாளர் ஒரு­வரை சுட்­டுக்­கொன்­ற­தா­கவும் சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி டுவார்ட்டே கூறி­யி­ருந்தார்.

 

இந்­நி­லையில், பறந்­து­ கொண்­டி­ருந்த ஹெலி­கொப்டர் ஒன்­றி­லி­ருந்து நபர் ஒரு­வரை வெளியே தள்­ளி­ய­தா­கவும் ஜனா­தி­பதி டுவார்ட்டே செவ்­வி­யொன்றில் கூறி­ய­தாக பிலிப்பைன்ஸ் பத்­தி­ரிகை ஒன்று செய்தி வெளி­யிட்­டது.  

 

 

ஹெலி­கொப்டர் ஒன்றில் தான் பயணம் செய்­த ­போது அந்த ஹெலி­கொப்­டரை  கடத்­து­வ­தற்கு முயன்ற நபர் ஒரு­வ­ரையே இவ்­வாறு தான் வெளியில் தள்­ளி­ய­தா­கவும் ஜனா­தி­பதி டுவார்ட்டே கூறி­யுள்ளார்.

 

தேவை­யானால் மீண்டும் அவ்­வாறு செய்­வ­தற்கும் தான் தயார் எனவும் அவர் கூறி­யுள்ளார். 

 

நீங்கள் ஊழல் பேர்­வ­ழி­யானால், உங்­களை ஹெலி­கொப்­டரில் ஏற்றி, தலை­நகர் மணி­லா­வுக்குச் செல்லும் வழயில் ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து வெளியில் தள்­ளுவேன் என அவர் கூறியதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்தது. 

 

ஆனால், இவ்வாரம் மீண்டும் அவரிடம் இது குறித்து வினவப்பட்ட போது, அக்கூற்றை நிராகரிக்கும் வகையில் அவர் பதிலளித்துள்ளார். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.