Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
செல்போன் வாங்­கிய கடனை அடைக்க சிறு­வனை கட­த்தி கொலை­ செய்த இளை­ஞன்
2017-01-02 20:18:13

செல்போன் வாங்­கிய 30,000 ரூபாவை அடைக்க சிறு­வனை இளை ஞர் ஒருவர் கடத்தி கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. 

 

தமிழகத்தின் ஆரணி அரு­ண­கிரி சத்­தி­ரத்தை சேர்ந்­தவர் தாமோ­தரன். வங்கி அதி­காரி. இவ­ரது மகன் யுவராஜ் (12). இவர் அதே பகு­தியில் இருக்கும் நக­ராட்சி பாட­சா­லையில் தரம் 8 இல் படித்து வரு­கிறார். 

 

முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா மறை­வை­யொட்டி டிசம்பர் 6-ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை 3 நாட்கள் விடு­முறை விடப்­பட்­டி­ருந்­தது. இதனால் யுவராஜ் வீட்­டி­லேயே இருந்­துள்ளார்.

 

கடந்த 8-ஆம் திகதி விடு­முறை நாளில் வீதியில் விளையாடி கொண்டிருந்த யுவராஜ் மாய­மா­கி­யுள்ளார்.  

 

இதனையடுத்து பெற்றோர் உற­வி­னர்கள் பல இடங்­களில் தேடியும் கிடைக்­காத நிலையில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.
பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து ஆரணி நக­ரி­லுள்ள அனைத்து கண்­கா­ணிப்பு கெம­ராக்­களின் காட்சி பதி­வு­களை ஆய்வு செய்­தனர்.

 

இந்­நி­லையில் கடந்த 10-ஆம் திகதி விவ­சாய கிணற்றில் யுவராஜ் சட­ல­மாக மிதப்­பதாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்துள்­ளது. 

 

சிறு­வனின் இடுப்பு பகு­தியில் கயிற்றால் கல் கட்­டப்­பட்­டி­ருந்­தது. எனவே, சிறுவன் கொலை செய்­யப்­பட்டு கல்லால் கட்டி கிணற்றில் வீசி­யது தெரி­ய­வந்­தது.

 

உடல் மற்றும் முகம், தலையில் இரத்த காயங்கள் இருந்­துள்­ளன. யுவ­ராஜை கடத்­திய பின்னர் கொலை­யாளி அடித்து, துன்­பு­றுத்தி சித்தி­ர­வதை செய்­தி­ருக்­கலாம் என உற­வி­னர்கள் சந்­தேகம் எழுப்­பினர்.

 

இத­னி­டையே சி.சி.ரி.வி காட்­சியில் சிறுவன் யுவ­ராஜை, வங்கி அதி­காரி தாமோ­த­ரனின் தூரத்து உற­வி­ன­ரான ஆர­ணியை சேர்ந்த ஜெயக்­குமார் ( 24) என்­பவர் மோட்டார் சைக்­கிளில் அழைத்துச் சென்­றமை தெரி­ய­வந்­தது. 

 

ஜெயக்­கு­மாரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து விசா­ரணை செய்­ததில், சிறுவன் யுவ­ராஜை மோட்டார் சைக்­கிளில் கடத்தி சென்று ஜெயக்­குமார் கொலை செய்­ததை ஒப்புக் கொண்டார்.இத­னை­ய­டுத்து ஜெயக்­கு­மாரை பொலி ஸார் கைது செய்­தனர்.

 

இது குறித்து ஜெயக்­குமார் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, நான் ஒன்லைன் மூலம் செல்­போன்­களை விலைக்கு வாங்கி கூடுதல் விலை நிர்­ண­யித்து விற்­பனை செய்து வந்தேன். 

 

செல்­போன்கள் வாங்­கி­யதில் எனக்கு 30,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்­பட்­டது.இந்த தொகையை நானே கட­னாக தான் வாங்கி இருந்தேன். வீட்டில் கேட்டு பார்த்தேன் பணம் தர­வில்லை.

 

அப்­போது தான் எனது உற­வி­ன­ரான வங்கி அதி­காரி தாமோ­த­ரனின் ஞாபகம் எனக்கு வந்­தது.

 

அவ­ரது மகனை கடத்தி மிரட்­டினால் எனக்கு தேவை­யான 30,000 பணம் கிடைக்கும் என திட்­ட­மிட்டேன். அதன்­படி சிறுவன் யுவ­ராஜை ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்­கிளில் கடத்­தினேன்.

 

என்னால் மிரட்டி பணம் பறிக்க முடி­ய­வில்லை. பின்னர் மாட்டிக் கொள்வோம் என பயந்து சிறு­வனை கொன்று வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் வீசி­விட்டு தப்­பினேன். விசா­ர­ணையை தொடக்கம் முதலே கண்­கா­ணித்தேன்.

 

முதலில் சிறுவன் தற்­கொலை செய்து கொண்­டி­ருக்­கலாம் என பொலிஸார் நினைத்­ததாக கேள்­வி­ப்பட்டேன். தற்­கொலை செய்து கொண்­டி­ருக்­கலாம் என பொலிஸார் நினைத்­ததாக கேள்­வி­பட்டேன்.

 

இதனால் நிம்­ம­தி­ய­டைந்தேன். இந்த நிலையில் கெமரா காட்­சியை வைத்து பொலிஸார் என்னை பிடித்து விட்டார்கள் என கூறியுள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.