Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஊழல் குற்­றச்­சாட்டு தொடர்­பில் இஸ்­ரேலி­ய பிர­த­ம­ரிடம் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் விசா­ரணை
2017-01-04 11:22:36

இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாஹூ மீதான ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக அந்­நாட்டு இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் அவ­ரிடம் சுமார் 3 மணி­நேர விசா­ர­ணையை நடத்­தி­யுள்­ளனர்.

 

நீர்­மூழ்கி கப்பல் ஊழல் மற்றும் விபரம் வெளி­யி­டப்­ப­டாத மற்­றொரு ஊழல் தொடர்­பாக இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யாஹூ மீது வழக்­குப்­ப­திவு செய்து, விசா­ர­ணையை ஆரம்­பிக்­கு­மாறு அந்­நாட்டின் தலைமை சட்­டமா அதிபர் அலு­வ­லகம் கடந்த வாரம் உத்­த­ரவு பிறப்­பித்­தது.

 

 

2003 மற்றும் 2005ஆம் ஆண்­டு­களில் நெதன்­யா­ஹூவும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் வெளி­நா­டு­க­ளுக்கு சுற்­றுலா சென்­ற­தற்­கான செல­வு­களை பிர­பல அழ­கு­சா­த­னங்கள் தயா­ரிப்பு நிறு­வன உரி­மை­யா­ள­ரான நெதன்­யா­ஹூவின் நெருங்­கிய நண்பர் ஒருவர் ஏற்­று­க்கொண்­ட­தா­கவும், அதற்கு பிரதி உப­கா­ர­மாக அரச இயந்­தி­ரத்தின் மூலம் சில சலு­கை­களை அவர் அளித்­த­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

 

இது­த­விர, பிரான்ஸைச் சேர்ந்த பிர­பல தொழி­ல­தி­ப­ரிடம் 40,000 அமெ­ரிக்க டொலர்­களை நன்­கொ­டை­யாக பெற்­ற­தா­கவும் அவர் மீது குற்­றஞ்­சு­மத்­தப்­பட்­டுள்­ளது.

 

இந்த குற்­றச்­சாட்­டு­களை எல்லாம் அவர் தொடர்ந்து மறுத்து வந்­துள்ள நிலையில், மேற்­கண்ட ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக சுமார் 50 சாட்­சி­க­ளிடம் இஸ்­ரே­லிய இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் விசா­ரித்து, அவர்­களின் வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்­துள்­ளனர்.

 

இந்­நி­லையில், நேற்று முன்­தினம் பிர­தமர் நெதன்­யா­ஹுவின் வீட்­டுக்கு சென்ற பொலிஸ் படை­யினர், அவ­ரிடம் சுமார் 3 மணி நேர விசா­ர­ணையை நடத்­தி­யுள்­ளனர்.

 

எனினும் விசா­ரணை விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இதன் போது கெமராக்களில் படம்பிடிக்கப்படுவதை தடுக்க நெதன் யாஹுவின் வீட்டுக்­கு முன் கறுப்பு திரை போடப்பட்டிருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­து.   

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.