Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
விவா­­க­ரத்து வரை செல்லவைத்த நீல நிறம்; கணவனின் அதீத ஆன்­மிக நாட்­டத்தால் வந்த வினை
2017-01-04 14:42:17

கணவர்  ஒருவர் அனைத்துமே நீல நிறத்தில் இருக்க வேண்டுமென கூறி ஆன்­மி­கத்தில் ஈடு­பட்­டமையால் அவருடன் வாழமுடியாது எனக்கூறி பெண்ணொருவர் விவாகரத்து கோரியுள்ள சம்­­பவம் பெங்­க­ளூ­ரு வில் இடம்­பெற்­றுள்­ளது.

 

பெங்­க­ளூ­­­ருவைச் சேர்ந்த விஷால், நவீனா தம்பதியினருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிவிட்டன. மிகப்பெரிய நிறுவனமொன்றில் பணியாற்றும் இவர்கள் இருவரும் மாதத்துக்கு 5 இலட்சம் வரை ஊதி­ய­மாக பெறு­கின்­ற­­னர்.

 

 

சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்வில், விஷாலின் மாறுபட்ட வாழ்க்கை முறையால் நவீனா அதிர்ச்­சி­க்­குள்­ளா­கி­யுள்ளார். ஆன்மிக வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக்கொண்ட விஷால், தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஆசிரமங்கள் மற்றும் கோயில்களுக்கு செலவிட ஆரம்பித்துள்­ளார்.

 

மேலும், விஷாலின் கனவில் தோன்றிய சாமியார் ஒருவர், உனது வாழ்க்கை யில் அனைத்தும் நீல நிறமாக இருந்தால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

இதனை நம்பிய விஷால், தான் அணியும் ஆடை முதல் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தையும் நீல நிறத்தில் மாற்றியுள்ளார். அதுமட்டுமன்றி தனது மனைவி நவீனாவிடமும், நீ பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்.

 

அலுவலகத்திற்கு நீல நிற சட்டை அணிந்து செல்லும் இவர், வீட்டுக்கு வந்த வுடன் ஒரு சாமியார் போன்று மாறிவிடுகிறார். வீட்டுக்கு பூசப்பட்ட சுண்ணாம்பு நிறம் நீலம், வீட்டில் பயன்படுத்தும் நாற்காலிகள் நீல நிறம் என அனைத்தையும் நீல நிறமாக மாற்றியுள்ளார்.

 

கணவனின் இந்த மாறுபட்ட வாழ்க்கை முறையால் நிம்மதி இழந்த நவீனா, இனிமேல் தன் கணவனோடு வாழமுடியாது எனக் கூறி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.

 

இதனை விசாரித்த பொலிஸார், விஷாலை அழைத்து அறிவுரை வழங்கி யுள்ளனர். ஆனால் விஷால் தனது ஆன்மிக வாழ்க்கையை விட்டு வெளிவர மாட்டேன் என கூறிவிட்டதால், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப் பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.