Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கள்­ளக்­கா­தலி வேறொரு நப­ரு­டன் சென்­றதால் கள்­ளக்­கா­த­லியின் நண்பி கொலை
2017-01-04 15:03:15

கள்ளக்காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவருடன் சென்றதால் அவரது  தோழியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

 

சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தவர் ராணி (47).( பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) இவரது கணவர் சேகர். சில வருடங்களுக்கு முன்பு  இறந்துவிட்டார்.

 

ராணி, தனது தாய் மேன­காவுடன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) வசித்து வந்தார்.  இருவரும் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தனர். மேலும் ராணி சிலருக்­கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.

 

 

இந்நிலையில், மேன­­கா பூ  வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப் போது வீட்டிலிருந்த ராணி திடீரென  இரத்தக் காயங்களுடன் அலறி யபடி வெளியே ஓடிச்­சென்­­றுள்­ளார்.

 

இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதி­ர்ச்­சி­ய­டைந்து வைத்­தி­ய­
சா­லைக்கு கொண்டு சென்­­றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி  இறந்தார்.

 

இதைத் தொடர்ந்து, ரா­ணியின் உறவினர்கள் பொலிஸ் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு ராணியை கொலை செய்­த­வர்­களை உட­­ன­டி­யாக கைது செய்­யு­மாறு கூறி­யுள்­ளனர்.

 

இத­னை­ய­டுத்து பொலிஸார் கொலை நடந்த இடத்துக்கு சென்று பார்­வை­யிட்டனர். இதன்­போது  ராணியின் வீட்டுக்கு வெளியே கிடந்த செல்போனை கைப்பற்றினர்.

 

விசாரணையில், சி­வ­நேசன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) என்பவருக்கு சொந்தமான செல்போன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, பொலி­ஸாரின் விசாரணையில் தெரி­­ய­வந்­துள்­ள­தாவ­து, கிடைத்த ராஜபாளையத்தை சேர்ந்தவர் ­சி­வ­நே­­சன் (32). தங்கி அப் பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

 

இவருக்கும் புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்த செல்­வி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ள­து) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத் தொடர்பு இருந்துவந்தது.

 

செல்­வியும் ராணி­யும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். தான்  சம்பாதித்த பணத்தை எல்லாம் செல்­வி­யிடம் சி­வ­நே­­சன் கொடுத் துள்ளார்.

 

இந்நிலையில், சி­வ­நே­­சனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் செல்­வி நெருங்கிப் பழகியுள்ளார். இந்­நி­லையில் குறித்த நப­ருடன் செல்வி தலைமறைவாகியுள்­ளார்.

 

இதனால் செல்­வி மீது கணேசன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இது குறித்து ராணி­யை அடிக்கடி சந்தித்து சி­வ­நே­­சன் முறையிட்டுள்ளார். இந்நி­லை­யி­லே­யே ராணி­யை சி­வ­நே­­சன் பின் தொடர்ந்து சென் றுள்ளார்.

 

அங்கு செல்­வி குறித்­து பேசியுள்ளார். அப்போது ராணி­க்கும் சி­வ­நே­­சனுக்­கு­மிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செல்வி வேறொரு நப­ருடன் சென்ற தகவல் எதையும் ராணி சொல்ல மறுத்துள்ளார்.

 

எனவே, கடும்  ஆத்திரமடைந்த சிவ­நே­­சன் தன்னிடம் இருந்த கத்தியால் ராணியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராணி படுகாயமடைந்துள்ளார்.

 

இரத்த வெள்ளத்தில் அலறியடித்து வெளியே ஓடி வந்த ராணி­யை அக்கம்பக்கத்தினர் மீட்டு வைத்­தி­ய­சா­­லைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர். 

 

அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தமை  தெரியவந்துள்ளது. இதை யடுத்து சி­வ­நே­­சனை கைது செய்து பொலி­ஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

 

இதுதொடர்பாக, தலைமறைவாகியுள்ள அவரது கள்ளக்காதலி செல்­வி­யை­யும் தேடி வருகின்றனர். இக் கொலை சம்பவத்தால் அப் பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.