Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பிலிப்பைன்ஸில் சிறை உடைக்­கப்­பட்டு 158 கைதிகள் தப்­பி­யோட்­டம்
2017-01-05 11:19:09

பிலிப்­பைன்ஸின் சிறைச்­சாலை உடைக்­கப்­பட்டு 150க்கும் அதி­க­மானோர் தப்பிச் சென்­றுள்­ளனர். பிலிப்­பைன்ஸின் கொட்­டா­பாட்டோ மாநி­லத்தின் கிடா­பாவான் நகரில் அமைந்­துள்ள சிறையில் நேற்று அதி­காலை துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து சிறை உடைக்­கப்­பட்டு 150 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்­றனர்.

 

 

வடக்கு கொட்­டோ­பாட்டோ பகு­தி­யி­லுள்ள இந்த சிறையை, 12 க்கும் மேற்­பட்ட இஸ்­லா­மிய கிளர்ச்சியாளர்கள் என சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்கள் தாக்­கி­யதில் குறைந்­தது ஒரு சிறை அதி­கா­ரியும், ஒரு கைதியும் உயி­ரி­ழந்­த­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 

தாக்­குதல் சுமார் இரண்டு மணி­நேரம் நீடித்­த­தா­கவும், சிறை அதி­கா­ரி கள் தாக்­கு­தலை எதிர்­கொண்­டி­ருந்த சம­யத்தில் சிறைக் கைதிகள் ஏணிப்­ப­ல­கையைப் பயன்­ப­டுத்தி சிறையின் பின்­ப­குதி வழியாய்த் தப்பிச் சென்­ற­தாக பொலிஸ் பேச்­சாளர்  டியோ­னார்டோ கார்லோஸ் தெரி­வித்­துள்ளார்.

 

 

சம்­பவம் நடந்­த­போது சிறையில் 1,511 கைதிகள் இருந்­தனர். அவர்­களில் 158 பேர் தப்­பி­யோ­டி­யுள்­ளனர். அதில் 4 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

 

இத­னி­டையே, சிறை­யி­லி­ருந்து தப்பிச் சென்ற கைதி­களை பிலிப்­பைன் ஸின் படை­யி­னரும், பொலி­ஸாரும் தேடி வரு­கின்­றனர்.  மோரோ இஸ்­லா­மிய விடு­தலை முன்­னணி எனும் கிளர்ச்சிப் படை­யி­லி­ருந்து பிரிந்து சென்ற குழு அந்தத் தாக்­கு­தலை வழி­ந­டத்­தி­ய­தாகச்  சிறை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 

எனினும் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளத்தை இதுவரை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. தாக்குதலுக்கான காரணமும் தெரியவில்லை.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.