Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தினமும் 2 கிலோ மணல் உண்ணும் பெண் : தனது ஆரோக்கியத்திற்கு மணல் உண்பதாகக் கூறுகிறார்
2017-01-06 11:47:31

இந்­தி­யாவின் வார­ணாசி பகு­தியைச் சேர்ந்­த  78 வய­தான வயோ­திபப் பெண்­ணொ­ருவர் அவரின் ஆரோக்­கி­யத்­துக்­காக தினமும் 2 கிலோ மணலை உண்டு வரு­வ­தாகக் கூறி­யுள்ளார்.

 

வார­ணாசி பகு­தியைச் சேர்ந்­தவர் குஸ்­மா­வதி (78). இவர் தன்­னு­டைய 15 வய­தி­லி­ருந்து மணல் உண்டு வந்­துள்ளார். ஆனால், அவ­ருக்கு இது­வரை எந்த ஒரு பாதிப்பும் வர­வில்லை என்­பது தான் ஆச்­ச­ரி­யமே.

 

இது குறித்து குஸ்­மா­வதி கூறு­கையில், "நான் கடந்த 63 வரு­டங்­க­ளாக மண் மற்றும் கிராவல் போன்ற­வற்றை விரும்பி உண்­ணு­கிறேன். மணல் உண்­ணு­வதால் தனக்கு வயிற்று வலியோ பல் வலியோ வந்­த­தில்லை.

 

தன்னால் கடி­ன­மான கல்லை கூட கடித்து உண்ண முடியும், அதனால் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்­பட்­ட­தில்லை.  

 

பண்ணைத் தொழி­லா­ளி­யாக வேலை செய்து வரும் எனக்கு, தினமும் 2 கிலோ மணல் உண்ண வேண்டும். இது நாள் வரை தான் மருத்­து­வரை சந்­தித்­ததே கிடை­யாது என்றும் தன்­னு­டைய இந்த ஆரோக்­கி­யத்­திற்கு மணல் தான் காரணம்" என கூறி­யுள்ளார்.

 

மேலும், மண்ணை தனது 15ஆவது வயதில் உண்ண ஆரம்­பித்­த­தா­கவும், அப்­போது வயிறு வலித்­த­தா­கவும், அதன் பின்னர் பழ­கி­விட்­ட­தா­கவும் கூறி­யுள்ளார்.

 

தான் மணல் உண்­பதை பார்த்து தன் பேரக்­கு­ழந்­தைகள் மணல் விரும்பியாகி­விட்­டனர். 

 

இது ஒரு போதை என்று என்னை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­­தார்கள். ஆனால், நான் நன்றாக இருக்கிறேன். ஏன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.