Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'எதிர்வீட்டு அங்கிள் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்வார்' - தந்தை கொலை குறித்து பொலிஸ் விசாரணையில் 4 வயது சிறுமி தெரிவிப்பு
2017-01-09 15:19:28

தந்­தையை கொலை செய்த தாயின் கள்­ளக்­கா­த­லனின் விப­ரங்கள் குறித்து  பொலி­ஸா­ரிடம் விசா­ர­ணையின்போது 4 வயது சிறுமி ஒருவர் தெரி­வித்­துள்ள சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

 

தமி­ழ­கத்தின் மேட­வாக்­கத்தைச் சேர்ந்த அறி­வ­ழகன்(35). ராயப்­பேட்­டை­யி­லுள்ள தியேட்­டரில் எலக்ட்­ரீ­சி­ய­னாக வேலை செய்து வந்தார். உற­வுக்­கார பெண் சுரேகா (24) என்­ப­வரை மூன்று ஆண்­டுகள் காத­லித்து அறி­வ­ழகன் திரு­மணம் செய்­துள்ளார்.

 

6 ஆண்­டுக்கு முன் இவர்கள் திரு­மணம் நடந்­துள்­ளது. இந்த தம்­ப­திக்கு சாதனா (4) என்ற மகள்  உள்ளார். இந்­நி­லையில் கடந்­த­வாரம் 4 பேர் இவர்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு அறி­வ­ழ­கனை வெளியே இழுத்து சென்று படு­கொலை செய்துவிட்டு தப்பி ஓடி­விட்­டனர்.

 

‘கண­வரைக் காப்­பற்ற முயன்றபோது என்­னையும் கையில் வெட்­டி­விட்டு, கட்­டி­போட்டு விட்டு சென்­றனர். அவர்கள் எனது நகையை கொள்­ளை­ய­டிக்க வந்­த­வர்கள்’ என மனைவி சுரேகா பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

 

அதன்­படி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா­ரணை நடத்­தினர். அப்­போது மனைவி சுரேகா மீது பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது.  இதற்­கி­டையே அறி­வ­ழகன் மகள் சாத­னா­விடம் பொலிஸார் வீட்­டுக்கு யார் யார் வரு­வார்கள் என கேட்­டனர்.

 

அப்­போது சாதனா “எதிர்வீட்டு அங்கிள் அடிக்­கடி வீட்­டிற்கு வந்து அம்­மாவை பார்ப்பார். பின்னர் அம்­மாவை அங்கிள் கட்­டிப்­பி­டித்து முத்தம் கொடுத்­து­விட்டு செல்வார்” என கூறி­யுள்ளார்.

 

இதனால் சுரேகா மீது சந்­தேகம் வலுத்­தது. அறி­வ­ழகன் வீட்டினருகில் வசிக்கும் நபர்கள் குறித்து பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். அப்­போது கண­பதி (32) என்ற வாலிபர் சம்­பவம் நடந்த தினத்தில் இருந்து மாய­மாகி இருந்­தமை தெரி­ய­வந்­தது.

 

பின்னர் பொலிஸார் அவ­ரது செல்போன் எண்ணை வைத்து கண­பதியை கைது செய்து தீவிர விசா­ரணை நடத்­தினர். அப்­போது சுரே­கா­வுக்கும் கண­ப­திக்கும் இடையே கடந்த ஓராண்­டாக கள்­ளக்­காதல் இருந்­தமை தெரி­ய­வந்­தது. 

 

கள்­ளக்­காதல் விவ­காரம் அறி­வ­ழ­க­னுக்கு தெரிந்­ததால் சுரே­காவை கண்­டித்­துள்ளார். இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த சுரேகா கணவர் அறி­வ­ழ­கனை கொலை செய்ய திட்டம் திட்டி அதன்­படி படு­கொலை செய்­துள்­ளமை விசா­ர­ணையில்  தெரி­ய­வந்­தது.

 

இது குறித்து கள்­ளக்­கா­தலன் பொலி­ஸா­ரிடம் அளித்த வாக்­கு­மூ­லத்தில், அறி­வ­ழகன் வீட்டின் எதிரே எங்கள் வீடு என்­பதால் நான் அடிக்­கடி சுரே­காவை பார்த்து சிரிப்­பது வழக்கம்.

 

அவளும் என்னைப் பார்த்து சிரிப்பாள். பின்னர் நாள­டைவில் சுரேகா பண்­டிகை நாட்­களில் ஏதேனும் சமைத்தால் எங்கள் வீட்டுக்கு கொடுப்­பது வழக்கம். அப்­போது எனக்கும் தனி­யாக கொடுப்பாள். இதனால் எனக்கு சுரேகா மீது காதல்  வந்­தது.

 

ஒருநாள் எங்கள் வீட்டில் யாரும் இல்லை. அப்­போது சுரேகா எங்கள் வீட்­­டுக்கு வந்தாள். அப்­போது நான் மட்டும் தனி­யாக இருந்தேன். இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி நான் சுரே­கா­விடம் என் காதலை கூறினேன்.

 

அப்­போது எனக்கு திரு­மணம் ஆகி மகள் உள்ளார் என கூறினாள். அதற்கு நான் உன்னை  திரு­மணம் செய்து கொண்டு மக­ளையும் என் மகள் போல் வளர்ப்பேன் என கூறினேன். 

 

அதற்கு எதுவும் பேசாமல் சுரேகா சென்று விட்டார். ஒரு வாரம் என்னை பார்க்­காமல் சுரேகா தவிர்த்து வந்தார். அறி­வ­ழகன் வேலைக்கு சென்றால் நள்­ளி­ரவு 1 மணிக்கு மேல் தான் வீட்­டிற்கு வருவார் என்­பதால் நான் ஒருநாள் இரவு 11 மணிக்கு சுரேகா வீட்­டுக்குச் சென்றேன்.

 

அப்­போது கதவை திறந்த சுரேகா  நீ ஏன் இங்கு வந்தாய் என்று திட்­டினாள். உட னே நான் உன்னை பார்க்க வந்தேன்  என கூறினேன். யாரா­வது பார்த்தால் பிரச்­சி­னை­யாகும், நீ சென்று விடு என  கூறினாள்.

 

உடனே சுரே­காவை கட்டி அணைத்தேன். அப்­போது சுரேகா எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருந்­ததால் அன்று நாங்கள் இரு­வரும் உல்லா­ச­மாக இருந்தோம்.

 

பின்னர் தினமும் நான் இரவு 11 மணியில் இருந்து 12 மணி வரை சுரேகா வீட்டில் தான் இருப்பேன். இந்த விஷயம் அறி­வ­ழ­க­னுக்கு தெரி­ய­வந்­தது. இதனால் என்­னையும் அவர்  கண்­டித்தார்.

 

ஆனாலும் எங்கள் நட்பு தொடர்ந்­தது. இதற்­கி­டையே புத்­தாண்டு தினத்தில் நாங்கள் இரு­வரும் ஒன்­றாக இருந்­ததை அறி­வ­ழகன் பார்த்து விட்டார். இதனால் எங்­க­ளுக்குள் பிரச்­சினை வந்­தது.

 

அறி­வ­ழகன் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்­டினார். இதனால் என்னை கொலை செய்­வ­தற்கு முன் அறி­வ­ழ­கனை கொலை செய்ய நானும் சுரே­காவும் திட்டம் போட்டோம்.

 

அதன்­படி நேற்று முன்­தினம் இரவு நான் நண்­பர்கள் இரண்டு பேருடன் வந்து அறி­வ­ழ­கனை வாயை பொத்தி வீட்டினருகே உள்ள முட்டுசந்தில் இழுத்து வந்து படு­கொலை செய்தோம்.

 

பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் வராத வகையில் சுரேகா கையில் வெட்டு காயங்­களை ஏற்­ப­டுத்தி அவ­ரது கை மற்றும் கால்­களை கட்­டி­ப்போட்­டு­விட்டு சென்று விட்டோம். இவ்வாறு கணபதி வாக்குமூலத்தில் கூறியதாக பொலி­ஸார் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சுரேகா மற்றும் கள்ளக்காதலன் கணபதி மற்றும் கொலை சம்ப வத்தில் ஈடுபட்ட கணபதியின் நண்பர்கள் இருவரென 4 பேரையும் பொ­லிஸார் கைது செய்தனர்.      

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.