41 வயது நபரை திருமணம் செய்ய ஆசைப்பட்ட 11 வயது சிறுமி…..!

0 212

மனித நாகரீகம் இப்போது அழிவுப்பாதையை நோக்கி நகர்கின்றது. பல வன்கொடுமைகள், சூதாட்டங்கள், கொலைகள், கொள்ளைகள் என உலகில் நிரம்பி அநாகரீகங்கள் தான் தலைதூக்கி உள்ளன.

இதனடிப்படையில், மலேசியாவை சேர்ந்தவர் சே அப்துல் கரீம் (41). இஸ்லாமியரான இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவர் தாய்லாந்தில் 11 வயது சிறுமியை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இது மலேசியாவில் வாழும் பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமன்றி மனித நேயமுள்ளவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 மனைவிகள், 6 குழந்தைகள் இருக்கும் போது இவருக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த திருமணத்துக்கு ஒத்துழைக்க கூடாது என்று எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளது.

இதற்கு அப்துல் கரீம் பதில் அளித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சம்மதத்தில் தான் திருமணம் செய்ததாக கூறியுள்ளார். இன்னும் 5 ஆண்டுகள் அதாவது 16 வயது வரை அந்த சிறுமி பெற்றோருடனே இருப்பார் என தெரிவித்தார்.

மலேசியாவில் 18 வயதுக்கு குறைந்த பெண்களை திருமணம் செய்வது குற்றம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 16 வயதாவது இருக்க வேண்டும். அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்ய ‘ஷியா’ நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!