கால்பந்து வீரர் நெய்மரை கலாய்த்த பெண்…….!

0 340

பிறரை விமர்சிப்பதற்கு சமூக வளைத்தளங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றது. எல்லோரின் நடிப்பு திறன்கள் காணொளிகள் மூலம் பொருத்தமானவர்களிடம் செல்கின்றது. மற்றும் எல்லோருக்கும் பொழுதுபோக்கு அம்சமாக இவ் வீடியோ இணைப்பு தீனிப்போடுகின்றது.

அந்தவகையிலா் காலில் அடிப்பட்டதுபோல் மைதானம் முழுவதும் அங்கப்பிரதட்சணம் செய்யும் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரை பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், இந்திய பெண் ஒருவர் செய்துள்ள நகைச்சுவை காணொளி வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் நடந்து வரும் ஃபிபா உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது ஐந்து முறை சாம்பியனான பிரேசில். கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பிரேசில் பார்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம். அந்த அணியின் நெய்மர்தான்.

உலகின் மிகவும் பெறுமதிமிக்க வீரரான நெய்மர், சமீபத்தில் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பினார். உலகக் கோப்பையில் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய ஆட்டத் திறனைவிட, அவருடைய நடிப்பு திறமை இந்த உலகக் கிண்ணத் தொடரில் அதிகம் உள்ளதாக சமூக வளைத்தளங்களில் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். தொட்டதெற்கெல்லாம் காலில் அடிப்பட்டதுபோல கீழே விழுந்து, உருண்டு, புரண்டு நெய்மர் ஓவர் ஆக்டிங் செய்வதாக விமர்சனம் வந்தன. இது தொடர்பாக பல மீம்ஸ்கள், வீடியோக்கள் வந்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் நெய்மர் செய்யும் அந்த நடிப்புக்களை குறித்த பெண் நடித்து காட்டியுள்ளார். அவர் செய்யும் சேட்டைகள் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும் வண்ணமாக உள்ளது. அந்த வீடியோ இணைப்பு கீழே.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!