கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்ற இலங்கை பிரதிநிதிகள்…!

0 124

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பிரதிநிதிகள் சென்று நலம் விசாரித்துள்ளனர். 

கலைஞர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்தே அவர்களுடைய தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் தங்கி குணமடைய போராடி வருகின்றனர்.

இதன்போது பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமானும், செந்தில் தொண்டமானும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்து கொண்டனர்.

அத்துடன், கலைஞர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கொடுத்தனுப்பிய கடிதத்தையும், அவர்கள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர்.

இவர்களுடன், சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் கிருஷ்ணமூர்த்தியும் காவேரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

அதேவேளை, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo