சிங்கப்பூருக்கு சென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவன்…!

0 127

சிங்கப்பூரில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவனான பாண்டிருப்பைச் சேர்ந்த விஸ்வலிங்கம் சஞ்சய் வெற்றிபெற்று மூன்றாம் இடத்திற்காக வெண்கலப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.

உலகின் பல நாடுகளில் இருந்து வருகைதந்த மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற இச்சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்று பாடசாலைக்கும் இப்பிரதேசத்திற்கும் பாண்டிருப்பு கிராமத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவன் சஞ்சய்க்கும் வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றி….

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!