மெக்சிகோவில் 100 பயணிகளுடன் பயணித்த விமானம் தீபிடித்து விபத்து…!

0 120

மெக்சிகோவில் வடக்கு மாகாணமான டுராங்கோவில் விமான நிலையத்திலிருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்ட சில நொடிகளிலேயே திடீர் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமாணத்தில் பயணம் செய்த 85 பேர் காயம் அடைந்ததுடன், இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த விபத்து சம்பவம் குறித்து டுராங்கோ மாகாண ஆளுநர் ஜோஸ் ரோசாஸ் குறிப்பிடுகையில், விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் அவசர தரையிறப்பட்டது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo