“தினமும் ஆடை இல்லாமல் உறங்கச் சொல்வார்கள்” 7 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்…!

0 427

இந்தியாவின் பீகார் மாநிலம் முசாப்பூர் நகரில் உள்ள சிறுமிகள் தங்கும் விடுதி, பாலியல் தொழில் செய்யும் இடமாக செயல்பட்டு வந்த சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைத்தது.

இது குறித்த தகவல்களை அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் கருவுற்றால், அதனை கலைப்பதற்கு விடுதியில் தனி அறையும் செயல்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணையின் தீவிரத் தன்மையால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்து கொண்டிருக்கின்றது.

மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாம்பூரில் இயங்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்பித்தது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.

இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கைகள் இன்று வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து 39 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது. இதையறிந்த நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்கள்.

இதைத் தொடர்ந்து பொலிஸார் அரசு விடுதியின் வளாகத்தில் மண்ணைத் தோண்டினர். ஆனால் எந்த அவயங்களும் கிடைக்காத நிலையில் ஒரு சிறு எலும்புத் துண்டுக் கூட சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் செவ்வியொன்று வெளியாகியுள்ளது,

அதில் அந்தச் சிறுமி ” விடுதியில் கிரண் ஆண்ட்டிதான் எங்களுக்கு சாப்பாடு கொடுப்பார். அவர் எங்களது சாப்பாட்டில் போதை மருந்து கலந்துக் கொடுப்பார். பின்பு எங்களை தினமும் ஆடையில்லாமல் உறங்கச் சொல்வார்கள். அப்போது எனக்கு 7 வயதுதான். ஆடையோடு தூங்கச் சென்றால் எங்களை அடித்து துன்புறுத்துவார்கள். போதை மருந்து இல்லையென்றால் தூக்க மாத்திரை கொடுப்பார்கள்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo