சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்கள் மீட்பு…!

0 122

சுமார் 3.2 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விமான நிலைய சுத்திகரிப்பு சேவை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹா பகுதியை சேர்ந்த 51 வயதான குறித்த நபர், சிங்கப்பூரில் இருந்து நேற்று (02.08.2018) மாலை 4.30 மணி அளவில் UL 303 விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார். 

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, 500 கிராம் எடையுள்ள 5 தங்க பிஸ்கட்கள் குறித்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தங்க பிஸ்கட்டுக்கள் 3,250,000 ரூபாய் பெறுமதியுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!