“மக்கள் இளவரசி டயானா” மலரும் நினைவுகள்…!

0 1,216

இளவரசி டயானா 1961 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி , பார்க் ஹவுஸ், சான்றிங்கம், நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார். ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா, புனித மேரி மேக்டலீன் தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றார். அவருடன் பிறந்தவர்கள் சாரா, ஜேன் மற்றும் சார்லஸ் ஆகியோர். அவர் பிறக்கும் ஒரு வருடத்திற்க்கு முன் ஜேன் எனும் சகோதரன் இறந்து போனார். வாரிசுக்கான மோதல் டயானாவின் பெற்றோர்களுக்கு இடையில் வெறுப்பை தந்தது. டயானவிற்க்கு எட்டு வயதிருக்கும் போது பெற்றோர் விவாகரத்து பெற்றனர்.

                                           

டயானா முதலில் நோர்ஃபோக்கில் உள்ள ரிட்டில்ஸ்வர்த் ஹோல் பெண்கள் பாடசாலையில் படித்தார். பின்னர் செவனோக்ஸ், கென்டில், உள்ள “தி நியூ ஹை ஸ்கூல்லில்” படித்தார். 1973ல் லார்டு அல்தார்ப், டார்த்மவுத்தின் கோமாட்டி ரைய்னெவுடன் உறவு கொண்டார். தன் தந்தை டயானாவை எர்ல் ஸ்பென்சர்ராக நியமித்து; டயானா, லேடி டயானா என்றழைக்கப்பட்டார். டயானா மிகுந்த அமைதியானவர், இசையிலும், நடனத்திலும் விருப்பம் உள்ளவர். அவர் கல்வியில் பெரிதாக பிரகாசிக்க வில்லை. அதிக பாடங்களில் தோல்வியுற்றிருந்தார். ஆனால் அவருக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. சிறந்த பியானோ கலைஞராக சிறந்து விளங்கினார்.

டயானா நீச்சல், நீர் மூழ்குதல், பெல்லரினா எனும் கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண்ணாகவும் பிரகாசித்தார். அவர் பாலேட் நடனத்தை சிறிது காலம் பயின்றாலும் பின்னர் தன் உயரம் காரணமாக வெளியேறினார். டயானா முதன் முதலாக செவிலித்தாயாக அலெக்ஸான்றா எனும் பெண்ணிற்க்கு 17 வயதிருக்கும் போது வேலை செய்து வந்தார். அதன் பின்னர் அவர் சிறிது காலம், ஆரம்ப பள்ளியில் உதவியாளராக இருந்தார், தன் சகோதரி சாராவுக்கு உதவி செய்து வந்தார், விருந்தினர் கூட்டம், உபசரிக்கும் பெண்ணாக இருந்தார்.

இதற்கிடையில் தான் வேல்ஸ் இளவரசர் சார்லஸ்யிற்கும் டயானாவிற்கும் காதல் மலரந்தது. இளவரசர் சார்லஸ் டையானாவின் மூத்த சகோதரி சாராவுடன் முன்னரே தொடர்பு வைத்திருந்தார், அதன் பின்னர் பல்வேறு நிகழ்வுகளுக்கு பின், பெப்ரவரி ஆறாம் திகதி 1981இல் இளவரசர் சார்லஸ் தம் காதலை கூற டயானாவும் ஏற்றுக்கொண்டார். பெப்ரவரி இருபத்தி நான்காம் திகதி, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, டயானா 30,000 பவுண்டு மதிப்புள்ள மோதிரத்தை தேர்வு செய்தார். அதே மோதிரம் பின்னர் கேத் மிடில்டன்னுக்கு 2010இல் நிச்சயதார்த்த மோதிரம் ஆனது. தன் நிச்சயதார்த்தை தொடர்ந்து டயானா தன் வேலைகளை விடுத்து, க்லேரன்ஸ் இல்லத்தில் சிறிது காலம் வசித்து வந்தார். அதன் பின்னர் தன் திருமணம் வரை பக்கிங்க்ஹாம் இல்லத்தில் வசித்து வந்தார். 1981, ஜூலை, இருபத்தி ஒன்பதாம் திகதி டயானாவுக்கும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ்க்கும் புனித போல் தேவாலயத்தில் திருமணம் நடந்தது.

               

இதன் மூலம் இருபது வயது டயானா வேல்ஸ் இளவரசி ஆனார். இத்திருமணத்தை 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியின் ஊடாகவும், அறுபது லட்சம் மக்கள் நேரடியாகவும் கண்டு கழித்தனர். டயானா இருபத்தி ஐந்து அடி நீளமுள்ள ஒன்பதாயிரம் பவுண் மதிப்புள்ள உடையை அணிந்து வந்தார்.

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். இவருக்கு வில்லியம்ஸ் மற்றும் ஹென்றி எனும் ஹரி என இரு மகன்கள் பிறந்தனர். இளவரசர் சார்லசை திருமணம் செய்ததில் இருந்து தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசி டயானா.

1995 ஆண்டு பி.பி.சி’யின் ஓர் செவ்வியில், இளவரசி டயானா சார்ல்சிற்கு துரோகம் செய்துவிட்டார். அவர் வேறு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி வெளியானது. அதன் பிறகு இனிமேலும், அவரை எப்படி இளவரசியாக மக்கள் ஏற்றுகொள்வார்கள் என கேள்விகள் எழுந்தன.

இளவரசர் சார்லசும், டயானாவும் அதிகாரப்பூர்வமாக 1992ஆம் ஆண்டு பிரிந்தார்கள். இதற்கு பிறகு நான்கு வருடங்கள் கழித்து 1996ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆனது. டயானாவிற்கும் வேறு ஓர் நபருக்கும் தொடர்பு இருந்தது என்று பல செய்திகள் தான் இதற்கு காரணம். விவாகரத்து ஆனதுடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த இராஜ மரியாதை இரத்தானது.

என்னத்தான் அரச குடும்பத்தில் வாழ்ந்தாலும் திருமணமான புதிதில் நிறைய மனநல பிரச்சினைகளும், பசியின்மை கோளாறு, தற்கொலை முயற்சிகள் போன்றவற்றில் சிக்கி தவித்ததாக டயானா தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தையும் கடந்து தான் ஓர் நல்ல தாயாக இருந்ததாக மேலும் அவர் அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுதும் கண்ணிவெடிகளை எதிர்த்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இளவரசி டயானா. மற்றும் எண்ணற்ற அறக்கட்டளைகளுக்கு நிறைய உதவியும் செய்தார்.

                                                       

தனிமையில் வாழ்ந்த டயானா பாரிஸ் நகரில், இரவு காரில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனர் குடித்துவிட்டு கட்டுப்பாட்டினை இழந்ததால் தான் விபத்து ஏற்பட்டு இளவரசி டயானா இறந்தார் என செய்திகள் வெளியாயின. பிறகு நீதிமன்றம், சாலை விதிகளை மீறி அவர் வண்டியை ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என தனது தீர்ப்பில் கூறியது.

டயானா தனது ஆண் நண்பருடன் ஹோட்டலில் இருந்தது ஓர் செய்தியாளருக்கு தெரிந்து அவர் புகைப்படம் எடுத்துவிட்டதாகவும், அவரிடம் இருந்து தப்பிக்க முயலும் போது அவசரத்தில் அவர் சீட் பெல்ட்டை அணியாததாலும் தான் அவர் விபத்தின் போது இறந்ததற்கு காரணம் என்றும் அந்நாளில் செய்திகளில் கூறப்பட்டது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராத்சிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.

இளவரசி டயானா இறந்த சில மாதங்களில், கண்ணிவெடிகளை எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது.

பல்வேறுபட்ட செய்திகள், வதந்திகள், இரகசியங்கள் என பல வலைகளில் சிக்கித்தவித்த போதிலும் கூட, இன்று வரை டயானா வேல்ஸின் இளவரசி என்ற பெயருடன் தான் அழைக்கப்பட்டு வருகிறார். இன்று வரை ஒப்பற்ற புகழ் அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!