நிச்சய மோதிரத்தை கழற்றி மறைத்தாரா ப்ரியங்கா…?

0 204

டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பொலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல பொலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வருவதாக வெகு நாட்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், இவர்கள் இருவருக்கு லண்டனில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தான் ஒப்பந்தமாகியுள்ள திரைப்பட படபிடிப்பு நிமித்தமாக லண்டன் சென்றிருந்த ப்ரியங்கா லண்டனிலிருந்து டெல்லி திரும்பினார். 

அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் அவர் தன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, தனது பாக்கெட்டில் மறைத்து வைத்தார். இந்த மோதிரம் அவரது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என தெரிகிறது. 

இதன் காரணமாக ப்ரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பாகி வருகின்றது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!