ஆண்களே மது அருந்துதல் உங்கள் முக அழகை பாதிக்கும்…!

0 723

எமது இளைஞர்கள் எல்லோருமே இப்போது நாகரீக மோகத்தில் விழுந்து தத்தளித்துக் கொண்டு இருக்கின்றார்கள். முன்பு எல்லாம் ஆண்கள் மாத்திரமே மதுசாரம் குடித்து வந்த நிலையில் இப்போது பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எனும் வகையில் மதுவை குடித்து வருகின்றார்கள்.

தங்களது அழகு தொடர்பில் கவனம் செலுத்தும் பெண்கள் தற்போது முகப்பரு பிரச்சினையால் அவதியுறும் நிலை உருவாகிவிட்டது. அதுசரி, முகப்பருவுக்கும் மதுவிற்கும் தொடர்புண்டா?

முகப்பரு என்பது பொதுவாக பக்டீரியா, தொற்று, ஹோர்மோன் மாற்றங்கள் மற்றும் மாசுக்களால் அடைக்கப்பட்ட துளைகள் காரணமாக தோன்றுபவை. இருப்பினும் மதுசாரம் அருந்துவதால் முகப்பருக்கள் அதிகரிக்கும் அல்லது தோன்றும் என குறிப்பிட முடியாது.

எனினும், மதுசாரம் அருந்துவது மறைமுகமாக முகப்பருக்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றது எனக் குறிப்பிடலாம்.

மதுசாரம் எப்படி முகப்பருக்கள் தோன்றுவதற்கு மறைமுகமான காரணியாக உள்ளது?

மதுசாரம் அருந்தும் போது நமது உடலை பாதுகாப்பதற்கென உள்ள செல்கள் குறைவடைவதோடு அவை படிப்படியாக அழிக்கப்படுகின்றது. இதனால் எமக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இது எமது தோலையும் பாதிக்கின்றது.

மதுசாரத்தினால் ஹோர்மோன் அளவு அதிகரித்து, எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகளவில் இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

அதே போன்று இந்த மதுசாரத்தினால் சக்கரையின் அளவு அதிகரிக்கப்பட்டு தொற்றுக்கள் ஏற்படுவதும் அதிகமாகின்றது. மேலும், இந்த மதுப் பழக்கத்தால் உடம்பில் உள்ள நீரின் அளவும் குறைவடைகின்றது. இதன் போது எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதும் அதிகரிக்கின்றது. இதுவும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணமாய் அமைகின்றது.

இதேவேளை, எமது உடலினுள் சேரும் கேடு விளைவிக்கக் கூடிய பொருட்களை ஈரல் வெளியேற்றும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மதுசாரமும் எமது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இதன் அளவு அதிகரிக்கும் போது அதனை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈரல் செயற்படும்.

எனினும், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்றவாறு மதுசாரம் உட்கொள்வது, பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் இந்த சந்தர்ப்பத்தின் போது ஈரல் அமைதியாக இருக்கும்.

இதன் போது ஈரலின் செயலை தோல் செய்யும். அதாவது எமது உடலில் உள்ள கேடு விளைவிக்கக் கூடிய பொருட்களை தோல் வெளியேற்றும். இதன் போது பருக்கள் தோன்றும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!