பலரும் அறியாத வாழை இலையின் மகத்துவம்…!

0 981

முப்பழங்களில் ஒன்றான வாழைப்பழத்தில் எப்படி எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதேப் போன்று அதன் இலைகளிலும் பலரும் அறிந்திராத வகையில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள்.

அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது.

ஆனால் தற்போதைய வேகமான காலத்தில் மக்கள் வாழை இலையை மறந்து, பல்வேறு டிசைன்களில் தட்டுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நம் முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கவில்லை என்பதை விட மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே எந்த ஒரு சூழலிலும் நாம் முன்னோர்கள் கூறியவாறு வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம். 

வாழை இலையில் காணப்படும் நன்மைகள்:

வாழை இலையில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால், இது சரும பிரச்சினைகளை நீக்கும், தோள் பளபளப்பாகும், உடல் ஆராக்கியமாக இருக்கும்.

முடி பிரச்சினைகள் தீர்க்கும் அதாவது நரை முடி பிரச்சினைகள் நீங்கும்.

வாழை இலையில் உணவு உண்பதன் மூலம் உணவில் காணப்படும் காரம், உப்பு, புளிப்பு போன்றவை மீக சீக்கிரமாக உடலை சேரும்.

உடம்பில் காயம், புண் இருக்கும் இடங்களில் தேங்காய் எண்ணெயை தடவி வாழை இலையை மேலே மூடி வைத்தால் காயங்கள் ஆறும். 

வாழை இலையின் மேல் உணவை சுட சுட  சோற்றை பரிமாரும் போது அதில் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை மிகவும் விரைவாக சீரணமடைய செய்வதோடு வயிற்றுப் புண்ணை ஆற்றும் திறனை கொண்டது.

உணவு கெட்டு போகாமல் இருக்க, வாழை இலையில் உணவை பரிமாறி கட்டி வைத்தால் எவ்வளவு நேரமாகினாலும் அவ்வுணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி ஆரோக்கிய வாழ்வை வாழ்வார்கள் என்பது மிகவும் உண்மையானதொன்றாகும்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!