படங்களில் நடிக்க வடிவேலுக்கு தடை…!

0 330

நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம், ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை டைரக்டர் ஷங்கர் தயாரித்திருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்ற பெயரில் தயாரிக்க திட்டமிட்ட ஷங்கர், இதில் ஹீரோவாக நடிக் க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்குவதாக இருந்த நிலையில் இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கொன்றை அமைத்தனர்.

ஆனால் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துள்ளார். இதனால் படத்துக்காகக் போடப்பட்ட அரங்கம் வீணானது.
இதையடுத்து வடிவேலு மீது இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். நடிகர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கம் இதுபற்றி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. 
 

பிறகு, ‘படத்தில் நடிக்க வேண்டும். இல்லை என்றால் படத்துக்காக செலவழித்த தொகையை (சுமார் 9 கோடி) திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியது. இதை முதலில் மறுத்துவந்த வடிவேலு, பிறகு நடிக்கச் சம்மதித்தாராம்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விசாரித்தபோது, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம், ‘இன்னும் இரண்டு கோடி ரூபாய் வாங்கிக்கொடுங்க, நடிக்கிறேன்’ என்றாராம் வடிவேலு. இதை ஏற்றுக்கொள்ளாத தயாரிப்பாளர் சங்கம் அவருக்குத் தடை விதிக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அவர் நடிக்கத் தடைவிதித்துள்ளது. அதிகாரபூர்வமற்ற இந்த வாய்மொழி தடை காரணமாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருந்த படமும் இன்னொரு படமும் சிக்கலில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!